ரெய்கி சிகிச்சை வழங்கும் வழிமுறைகள். ரெய்கி சிகிச்சை பெறுபவர் அமர்ந்திருக்கும் நிலையிலும் படுத்திருக்கும் நிலையிலும் சிகிச்சை பெறலாம். சிகிச்சையை வழங்குபவர் நின்றுக்கொண்டும் முட்டிக்காலை மடித்து அமர்ந்த நிலையிலும் சிகிச்சை வழங்கலாம். அவசியம் உண்டானால் நாட்காலியில் அமர்ந்து கொண்டும் சிகிச்சை வழங்கலாம்.
1. ரெய்கி சிகிச்சை (ஹீலிங்) வழங்குபவர் 20 நிமிடங்கள் தியானம் செய்த பிறகுதான் சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
2. சிகிச்சையை (ஹீலிங்) தொடங்குவதற்கு முன்பாக, இறைவன், இயற்கை மற்றும் பிரபஞ்ச ஆற்றலின், அனுமதியை மற்றும் உதவியைக் கோர வேண்டும்.
3. சிகிச்சை பெறுபவரை சாயாமல் நாற்காலியில் அமரச் சொல்ல வேண்டும், அல்லது அமைதியாக கட்டிலில் படுத்துக்கொள்ள சொல்ல வேண்டும்.
4. சுருக்கமாக ரெய்கி சிகிச்சை பற்றிய விளக்கத்தை, சிகிச்சை பெறுபவருக்குக் கூற வேண்டும்.
5. சிகிச்சையைத் தொடங்கும் முன்னர் சிகிச்சை பெறுபவரை 5 நிமிடங்கள் அமைதியாக இருக்க பணிக்க வேண்டும்.
6. சிகிச்சை பெறுபவர் பூரணமாக குணமாக வேண்டும் என்ற நோக்கத்துடன் சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
7. சிகிச்சை அளிப்பவர், மனதளவில் தன்னை பாதுகாக்கும் கவசம் செய்துகொள்ள வேண்டும்.
8. சிகிச்சை பெறுபவருக்கு தலையில் தொடங்கி கால்கள் வரையில் ஆற்றலையும், ஆராவையும் மூன்று முறைகள் சுத்தம் செய்ய வேண்டும் (cleansing).
9. கரங்களால் தொடுவதன் மூலமோ, தொடாமலோ, முத்திரையைப் பயன்படுத்தியோ ரெய்கி ஆற்றலை அவருக்கு அனுப்ப வேண்டும்.
10. பாதிக்கப்பட்ட உடல் பகுதிக்கு அல்லது உறுப்புக்கு சற்று அதிக நேரம் ரெய்கியை செலுத்த வேண்டும்.
11. ரெய்கி ஆற்றல் சிகிச்சை வழங்குபவர் உடலின் புகுவதையும், அவரின் உடலிலிருந்து கரங்கள் மூலமாக சிகிச்சை பெறுபவரின் உடலுக்குள் புகுவதையும் கவனிக்க வேண்டும்.
12. சிகிச்சை வழங்குபவர் உடலிலிருந்து சிகிச்சை பெறுபவர் உடலுக்குள் செல்லும் ஆற்றல் தடைப்படும் போது அல்லது குறையும் போது, குணப்படுத்தும் வேலை முடிந்துவிட்டது என்று பொருளாகும்.
13. தொந்தரவுகள் குணமாகும் என்ற நம்பிக்கையை சிகிச்சை பெற்றவருக்கு ஏற்படுத்த வேண்டும்.
14. சிகிச்சைக்குப் பிறகு இறைவனுக்கும், இயற்கைக்கும், ரெய்கிக்கும், நன்றி கூற வேண்டும்.
15. தொடக்கத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறையும் பின்னர் வாரம் ஒருமுறையும் சிகிச்சை வழங்கலாம்.
16. தேவைப்பட்டால் முழுமையாக குணமாகும் வரையில் வாரம் ஒருமுறை ரெய்கி சிகிச்சை வழங்க வேண்டும்.