முக்காலத்துச் செய்திகளும் கிடைக்கும் வழிமுறைகள். மன ஓர்மை அமையப் பெற்றவர்களுக்கு முக்காலத்திலும் நடந்த, நடக்கின்றன மற்றும் நடக்கவிருக்கின்ற விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. முக்காலத்து செய்திகளும் கிடைக்கும் வழிமுறைகள்.
1. சிலருக்கு காதுகளில் மெல்லிய குரலாக செய்திகள் கேட்கும்
2. சிலருக்கு மனதுக்குள் குரலாக செய்திகள் கிடைக்கும்.
3. சிலருக்கு மனதுக்குள் எழுத்துக்களாகத் தெரியும்.
4. சிலருக்கு அந்த நிகழ்ச்சி அவரின் முன்பாக நடப்பதைப் போன்றும், அவர் அதை காண்பதைப் போன்றும் இருக்கும்.
5. சிலருக்கு சில நிகழ்வுகள் நிழலைப் போன்று தெரியும்.
6. சிலருக்கு புகைப் போன்றும் நிழலைப் போன்றும் உருவங்களும், காட்சிகளும் தெரியும்.
7. சிலருக்கு நடக்க இருக்கும் அல்லது நடந்த விசயங்கள் சினிமா காட்சிகளைப் போன்று கண்களுக்குள் ஓடும். சிலருக்கு மனதுக்குள் ஓடும். சிலருக்கு தலைக்குள் ஓடும்.
8. சிலருக்கு நடக்க இருக்கும் நிகழ்வுகள் முன்கூட்டியே கனவில் காட்டப்படும்.
9. சிலருக்கு மற்ற மனிதர்கள் மூலமோ, பத்திரிகைகள், புத்தகங்கள், தொலைக்காட்சி, வானொலி, போன்ற விசயங்கள் மூலமோ உணர்த்தப்படும்.
10. சிலருக்கு நடக்க இருக்கும் நிகழ்வுகள் நடந்துவிட்டவைப் போன்றும் அதை அவர் முன்கூட்டியே கண்டுவிட்டதைப் போன்றும் அனுபவித்ததைப் போன்றும் தோன்றும்.
11. சிலருக்கு மனதுக்குள்ளேயே விவாதங்கள் நடக்கும். அதாவது அவரே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு, அவரே பதில்களையும் சொல்லிக்கொள்வார். ஆனால் அந்தப் பதிலை அப்போதுதான் அவர் முதன் முதலில் அறிவார். அந்தக் கேள்விகளும், பதில்களும் அவருக்கு அறிவிக்கப்படுகின்ற செய்திகளாக இருக்கும். மனதுக்குள் நடைபெறும் இந்தக் கேள்வி பதில் நிகழ்ச்சி, அவருக்குத் தெரியாத விஷயங்களை அவருக்குக் கற்றுத்தரும் ஒரு வழிமுறையாகும்.
சிலருக்கு இவற்றில் ஒன்று இருக்கும், சிலருக்கு இவற்றில் சில இருக்கும், சிலருக்கு அனைத்துமே இருக்கும். சிலருக்கு மற்ற வழிமுறைகளிலும் செய்திகள் கிடைக்கலாம். இதுவும் அவரவர் கர்மப் பலனை பொறுத்தே அமையும்.