கை மருத்துவங்களை ஒன்று திரட்டுவோம். ஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவம் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந்த மருத்துவக் குறிப்புகளை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். வீடுகளில் கை மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவம் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் அவற்றை ஒன்று சேர்க்க வேண்டும், அவற்றை எழுத்து வடிவில் கொண்டுவர வேண்டும்.
பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள் அனைவரையும் சென்று சேர நம்மால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியின் முதல் படியாக இந்த கட்டுரையை வாசிக்கும் நபர்கள், அவர்களுக்குத் தெரிந்த கை வைத்தியம், மற்றும் வீட்டு வைத்தியங்களை, நமது இணையதளத்தில் பதிவு செய்யலாம். அவை நோய்கண்ட மற்றும் ஆரோக்கியமாக வாழ விரும்பும் பலருக்கும் உதவியாக இருக்கும்.
மனிதர்களுக்கு நல்ல விசயங்களைச் சொல்வதற்கு ஞானிகளும் சித்தர்களும் பிறந்து வர வேண்டும் என்றில்லை, நாமும் செய்யலாம். நீங்கள் அனுப்பும் மருத்துவக் குறிப்புகள் நீங்கள் வாசித்தவையாக, அல்லது கேள்விப் பட்டவையாக, இல்லாமல், நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் பயன்படுத்தி பயன் பெற்றவையாக இருக்கட்டும்.
Leave feedback about this