மனதின் திருப்தியும், நன்றி உணர்வும்
ஈர்ப்புவிதி

மனதின் திருப்தியும், நன்றி உணர்வும்

மனதின் திருப்தியும், நன்றி உணர்வும். பிரபஞ்சத்திடம் இருந்து உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் பெறுவதற்கு அடிப்படைத் தகுதியாக இருப்பது, நன்றி செலுத்துவது மற்றும் நன்றி உணர்வோடு இருப்பதுமாகும். இன்று வரையில் நமது வாழ்க்கையில் நாம் அனுபவித்த அனைத்துக்கும் நன்றி செலுத்த வேண்டும். தற்போது நம்மிடம் இருப்பனவற்றை கொண்டு மனத் திருப்தி அடைய வேண்டும்.

இதுவரையில் கிடைத்தவற்றுக்கு நன்றி செலுத்தாமல், கிடைத்தவற்றைக் கொண்டு திருப்தி அடையாமல் இருப்பவர்களுக்கு, புதிதாக எதையும் கேட்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாமல் போகிறது. திருப்தியும் நன்றியுணர்வும் இல்லாமல் எதை வேண்டினாலும் கிடைப்பது கடினம்.

சிறியதாகவோ பெரியதாகவோ எது கிடைத்தாலும், எது உங்களிடம் இருந்தாலும், அதைக் கொடுத்ததற்காக இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்துங்கள். நன்றி உணர்வோடு இருங்கள். வாழ்க்கையில் எது கிடைத்தாலும் பணமோ, பொருளோ, சொத்தோ, நகையோ, ஆரோக்கியமோ, மகிழ்ச்சியோ, அன்போ, காதலோ, நிம்மதியோ, அனுபவமோ, அனைத்துக்கும் நன்றி செலுத்துங்கள், நன்றி உணர்வோடு இருங்கள்.

இதுவரையிலும், இப்போதும், இதற்குப் பிறகும் உங்களிடம் இருக்கும், உங்களுக்குக் கிடைக்கும், அனைத்துக்கும் நன்றி செலுத்துங்கள். இருப்பதைக் கொண்டு முழு திருப்தி அடையுங்கள். நன்றி உணர்வோடு இருங்கள். அதற்குப் பிறகு உங்களின் தேவைகள் அனைத்தும் நீங்கள் கேட்காமலேயே பூர்த்தி செய்யப்படும்.

Leave feedback about this

  • Rating
X