Crop therapist massaging foot of client

Online Foot reflexology course for personal and home use

பாத அழுத்தச் சிகிச்சை

கால் பாதங்களில் கைகளைக் கொண்டு அல்லது அதற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மரக்கட்டையைக் கொண்டு அழுத்தம் கொடுத்து, உடல் உபாதைகளைச் சரி செய்து கொள்ளும் சிகிச்சை முறையே பாத அழுத்தச் சிகிச்சை என்பது.

இந்தச் சிகிச்சை முறையில் நம் உடலின் உள் மற்றும் வெளி உறுப்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகளை அல்லது இணைப்பு புள்ளிகளை இனம் கண்டு, அவற்றில் அழுத்தம் கொடுத்து தூண்டி விடுவதன் மூலமாக உடலின் இயக்கத்திற்குத் தேவையான சக்தி ஓட்டம், வெப்ப ஓட்டம், ரத்த ஓட்டம், காற்றோட்டம், நிணநீர் ஓட்டம் போன்றவை தூண்டிவிடலாம்.

அவை தூண்டப்படுவதன் மூலமாக நமது உடல் உறுப்புகளில் உருவாகியிருக்கும் தடைகள் நீங்கி, ஆரோக்கியமாகவும் சீராகவும் இயங்க உதவும். இதன் மூலமாக உடலின் கழிவுகள் நீக்கப்பட்டு, உடலின் இயக்கம் சீர் செய்யப்படுகிறது.

பாதச் சிகிச்சையை வாரம் ஒரு முறை என்ற விகிதத்தில், தொடர்ந்து எட்டு வாரங்களுக்கு எடுத்து வந்தால் நல்ல பலனைத் தரும்.

தலைப்புகள்

  • பாத சிகிச்சை ஓர் அறிமுகம்
  • பிரதிபலிப்பியலின் வகைகள்
  • சிகிச்சை அளிக்கும் முறை
  • பிரதிபலிப்பு தளங்களும் தீரும் நோய்களும்
  • உணவு பழக்கமும் நோய்களும்
  • சிகிச்சை அளிக்கும் கால இடைவெளி
  • சிகிச்சைக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

Covered Subject

  • An Introduction to Foot Therapy
  • Types of reflection
  • Method of treatments
  • Reflexing parts and healing
  • Food Preferences and Illnesses
  • Interval of treatment
  • Instructions to be followed for treatment

Advance Registration​

இணையம்வழி பாத அழுத்தச் சிகிச்சை வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சி ஏற்பாடு செய்யப்படும்போது தங்களுக்கு வாட்சாப்பில் தகவல் அனுப்பப்படும்.

Those who are interested in attending our online foot reflexology course, please fill out this form. We will send a WhatsApp message when the class is organized.

Foot reflexology course testimonials

Clear and detailed explanation and useful class for a healthy life – Jameela Beevi Thameem – Dindigul

அனைவருக்கும் வணக்கம்🙏🏻, கடந்த இரண்டு நாட்களாக (02.10.21 & 03.10.21) ஆன்லைனில் ராஜா அய்யா அவர்கள் மூலம் கௌரி மேடம் எடுத்த வகுப்பில் நான் கலந்து கொண்டேன். அதன் மூலம் நிறைய புதிய தகவல்களை கற்று கொண்டேன். மேடம் அனைத்து புள்ளிகளையும் நோய் குறியுடன் மிகவும் தெளிவாக விளக்கம் அளித்தார்கள். அப்பொழுது எப்படி செய்ய வேண்டும் என்றும் வீடியோ மூலம் காண்பித்தது மிகவும் நன்றாக புரியும்படி இருந்தது. எங்களுக்காக reference material அனைத்தும் ராஜா அய்யா அவர்கள் தயாரித்து அளித்தார்கள். அது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அந்த நேரத்தில் foot reflexology பற்றி முழு விளக்கமும் அய்யா அவர்கள் அளித்தார். அதனோடு இந்த வகுப்பை நாங்களும் பயிற்சி செய்ய ஆசியும் வழங்கியது எங்களை இன்னும் ஊக்குவிக்கும்படி இருந்தது. அதற்கு மிக்க நன்றி அய்யா🙏 இதில் சேர வாய்ப்பளித்த ராஜா அய்யாவுக்கும் என் குல தெய்வத்திற்கும் அன்பு பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் பல🙏🏻,💐🙇🏼‍♀️ – Sangeetha – UAE


வணக்கம் ராஜா சார், இறைவன் அருள் எங்களுக்கு முழுமையாக இருக்கிறது ஆதலால் தான் உங்களை போன்று ஒரு குரு எங்களுக்கு கிடைத்துள்ளார், அதற்கு முதலில் இறைவனுக்கு கோடி நன்றிகள். நான் கௌரி மேடம் நடத்திய பாத குசா சிகிச்சைமுறை பயிற்சியில் கலந்து கொண்டேன் , மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவர்கள் எங்களுக்கு மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் இந்த பயிற்சி முறையை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இந்த பயிற்சி முறையை ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான எளிமையான ஒரு பயிற்சி. மிக்க நன்றி கௌரி மேடம். – Sujatha.J – Kanchipuram