வாழ்க்கை அனுபவம். எப்போதும் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க வேண்டிய தேவையில்லை, சிலருக்கு சில வேளைகளில் கெட்டவனாக இருப்பது அவசியம். மற்றவர் நலத்தைவிடவும் உன் நலன் முக்கியம்.
எல்லோரிடமும் எல்லாச் சூழ்நிலையிலும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மிகவும் தூய்மையான தண்ணீர் யாருக்கும் உதவாது, மீன்கள் கூட அதில் வாழ முடியாது.
எப்போதும் எல்லோருக்கும் அடங்கிப் போகாதே அடிமை போன்று நடத்துவார்கள். சில வேளைகளில் சீற வேண்டும் எதிர்க்க வேண்டும்.
எப்போதும் எல்லோருக்கும் வழியச் சென்று உதவி செய்யாதே. உன்னை செருப்பைப் போன்று உபயோகித்து கழட்டி விடுவார்கள் சுயநல வாதிகள்
எல்லோரிடமும் எல்லாச் சூழ்நிலையிலும் திறந்த புத்தகமாக இருந்துவிடாதே. சில ரகசியங்களைக் காக்க வேண்டும், சிலவற்றை மறைக்க வேண்டும்.
அனைத்துச் சூழ்நிலையிலும் அனைவரையும் நம்பிவிடாதே. உன்னை படியாக எண்ணி மிதித்து ஏறிச் செல்ல பலர் முயல்வார்கள்.
உன் நிம்மதியைப் பாதிக்கக்கூடிய எந்த விஷயத்தையும் செய்ய ஒப்புக்கொள்ளாதே.
தாயும் பிள்ளையுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு என்பதை நினைவில் கொள். உன்னைத் தவிர இந்த உலகில் யாரும் எதுவும் முக்கியமில்லை என்பதை மறந்துவிடாதே.