ரெய்கி சிகிச்சை என்பது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ரெய்கி ஆற்றலை மட்டுமே துணையாக கொண்டு செய்யப்படும் சிகிச்சையாகும். மனிதனின் முழு உடலும் மனமும் பிரபஞ்சப் படைப்பாற்றலை அடிப்படையாக கொண்டு உருவானவையே. மேலும் உடல் மற்றும் மனதின் இயக்கத்துக்கும் பிரபஞ்ச ஆற்றல்களே துணை புரிகின்றன.
மனிதர்களுக்கு உடல் பாதிப்புகளும் நோய்களும் திடீரென உருவாவதில்லை. உடல் நிலையில் ஒரு பாதிப்பு உருவாகியுள்ளது என்றால், அன்றிலிருந்து பல மாதங்களுக்கு முன்பாகவே மனநிலையில் பாதிப்பு உண்டாகிவிட்டது என்று பொருளாகும். மனநிலையில் பாதிப்பு உண்டாவதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே சக்தி நிலையில் பாதிப்புகள் உண்டாகிவிட்டது என்றும் பொருளாகும்.
மனிதனின் ஆற்றல் குறையும் போது, அல்லது ஆற்றல் சீர்கேடு அடையும் போது மட்டுமே மனநலப் பாதிப்புகளும் உடலில் நோய்களும் உருவாகின்றன. சக்தி நிலையில் உண்டாகும் பாதிப்புகள் பல காலங்களுக்கு பிறகே மனதிலும் உடலிலும் பிரதிபலிக்கின்றன.
ஒரு மனிதனின் உடலுக்குள் இயற்கையின் உதவியைக் கொண்டு, ரெய்கி ஆற்றலைச் செலுத்தி, அவரின் ஆற்றலைச் சீர் செய்யும்போது; அவர் உடலில் உண்டான குறைபாடுகள் நிவர்த்தியாகி, ஆரோக்கியமும் மன நலமும் சீராகிறது.
ரெய்கி ஆற்றலைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் சில வழிமுறைகள்
1. மனதாலும் எண்ணத்தாலும் சிகிச்சை அளிப்பது.
2. வார்த்தைகளால் சிகிச்சை அளிப்பது.
3. பார்வையினால் சிகிச்சை அளிப்பது.
4. தொடாமல் சிகிச்சை அளிப்பது.
5. கைகளால் தொட்டு சிகிச்சை அளிப்பது.
6. நீர், உப்பு, மண், உணவுப் பொருட்கள், மற்றும் உலோகங்களைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பது.