எதார்த்தமாக நடப்பதைப் போல்
நீ என்னைக் காண வேண்டும்
எதிர்பாராமல் நடப்பதைப் போல்
நான் உன்னைக் காண வேண்டும்
என்றும் எதிர்பார்த்துக் கடந்து
செல்கிறேன் உன் வீட்டை
எல்லாம் எதிர்பார்த்தது தான்
உன் வீட்டில் உன்னைத் தவிர
அனைவரையும் பார்த்தேன்
எதிர்பார்த்தபடி நடந்தது – உன்
தந்தையின் வருகை மட்டுமே