விதியை மாற்ற முடியுமா?
விதி என்றால் சட்டம் என்று பொருளாகும். ஒரு மனிதன் இந்த உலகில் எவற்றை அடைய முடியும், எவற்றை அடைய முடியாது, எவற்றை அனுபவிக்க முடியும், எவற்றை அனுபவிக்க முடியாது, எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான சட்டங்கள்.
இயற்கை வகுத்த இந்த சட்டங்களை யாராலும் மாற்றவோ தவிர்க்கவோ முடியாது. ஆனால் அந்த சட்டங்களையும் கோட்பாடுகளையும் புரிந்துகொண்டு வாழும் போது நம் வாழ்வில் விரும்பத்தகாத விசயங்கள் நடக்காமல் தவிர்க்கலாம்.