விதி என்பது என்ன?
விதி என்றால் சட்டம் என்று பொருளாகும். ஒரு மனிதன் இந்த உலகில் எவற்றை அடைய முடியும், எவற்றை அடைய முடியாது, எவற்றை அனுபவிக்க முடியும், எவற்றை அனுபவிக்க முடியாது, எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான சட்டங்கள்.
இந்த உலகில் எவ்வாறு வாழ வேண்டும், ஒவ்வொரு விசயத்தையும் எவ்வாறு செய்ய வேண்டும், என்று ஒரு சட்டம் அல்லது கோட்பாடு உள்ளது. அதனை புரிந்துகொண்டு பின்பற்றி வாழும் போது இன்பமும், எதிராக செயல்படும் போது துன்பமும் விளைகிறது.