நோய்கள்

வைரஸ் காய்ச்சல் உருவாவதற்குக் காரணம் என்ன?

வைரஸ் காய்ச்சல் உருவாவதற்குக் காரணம் என்ன?

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் உருவாவதற்கு பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் காய்ச்சல் நோய்க்கான அறிகுறியாகவும், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், உடலின் குறைகளைச் சரி செய்யவும், உடலின் கழிவுகளையும் கிருமிகளையும் வெளியேற்றவும் உருவாகிறது.

இந்த கட்டுரையில் கிருமிகளினால் உருவாகும் காய்ச்சலை பற்றிப் பார்ப்போம். மனித உடலில் இருக்கும் பெரும்பான்மையான கிருமிகள் மனித உடலால் சுயமாகவே உருவாக்கப்பட்டவை. இந்த கிருமிகள் உடலின் தேவைக்காக உடல் சுயமாக உருவாக்கியவை. இந்தக் கிருமிகள் உடலுக்கு மிகவும் அவசியமானவை, மிகவும் நன்மையானவை, இவற்றால் உடலுக்கு எந்த தீங்கும் உண்டாகாது.

இரண்டாவதாக வெளியிலிருந்து உடலுக்குள் நுழையும் கிருமிகள். இவ்வகையான கிருமிகள் உணவின் மூலமோ, தின பயன்பாட்டுப் பொருட்கள் மூலமோ, ஆங்கில மருத்துவத்தின் ஊசிகள், மருந்துகள் மூலமோ அல்லது வெளி நபர்கள் மூலமோ உடலுக்குள் நுழையலாம்.

உடலுக்குத் தேவையில்லாத கிருமிகள் உடலுக்குள் நுழைந்துவிட்டால், உடல் எவ்வாறு தன்னை தற்காத்துக் கொள்ளும்?

நமது அரசாங்கங்களும், மருத்துவர்களும், தொலைக்காட்சி, வானொலி, மற்றும் நாளிதழ்களில், பல விளம்பரங்களைக் கொடுக்கிறார்கள். தண்ணீரில் கிருமிகள் இருக்கும், அதனால் தண்ணீரை கொதிக்க வைத்து அருந்துங்கள். உங்கள் இறைச்சியில், காய்கறிகளில், உணவுகளில், கிருமிகள் இருக்கும் நன்றாகக் கழுவி பின் சமைத்து உண்ணுங்கள் என்று.

சரி, ஒருவேளை அந்தக் கிருமிகள் மனிதனின் உடலுக்குள் நுழைந்துவிட்டால்; உடலை சுட வைக்க முடியுமா? அல்லது நெருப்பால் சுட்டு அந்த கிருமிகளைக் கொல்ல முடியுமா? எவ்வாறு அவற்றைக் கொள்வது? உடலுக்குள் தேவையற்ற கிருமிகள் நுழைந்து விட்டால்; அந்த கிருமிகளைக் கொல்வதற்காக, சில வேளைகளில் உடல் காய்ச்சலை உருவாக்கும். தண்ணீரில் இருக்கும் கிருமிகள் எவ்வாறு தண்ணீர் கொதிக்கும் போது கொல்லப் படுகின்றனவோ அதைப்போல் மனித உடலில் காய்ச்சல் உருவாகும் போது உடலிலும் தேவையற்ற கிருமிகள் கொல்லப்படுகின்றன.

வைரஸ் காய்ச்சல், அல்லது கிருமிகளால் உண்டான காய்ச்சல் என்பது உண்மையில் கிருமிகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய காய்ச்சல் கிடையாது. அல்லது உடல் சுயமாக உருவாக்கிய கிருமிகளைக் கொல்வதற்காக உருவான காய்ச்சலும் கிடையாது. மாறாக உடலுக்குத் தேவையற்ற கழிவுகளையும் கிருமிகளையும் கொல்வதற்காக உடல் சுயமாக உருவாக்கிய காய்ச்சல்.

தெருவோரங்களில் நாயோ பூனையோ செத்துக் கிடப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்தப் பிணத்தைத் தின்று அழிப்பதற்காக செத்துப்போன பூனை அல்லது நாயின் உடலில் புழுக்கள் உருவாவதையும் பார்த்திருப்பீர்கள். இப்போது சற்று சிந்தனை செய்து பாருங்கள். இந்தப் புழுக்கள் அனைத்தும் சேர்ந்து, அந்த நாயைக் கொன்றனவா? அல்லது செத்துப்போன நாயின் உடலை அழிப்பதற்காக புழுக்கள் உருவானதா?

உடலில் கிருமி உருவானதால் தான் காய்ச்சல் உருவானது என்ற ஆங்கில மருத்துவத்தின் கூற்றுப்படி பார்த்தால் புழுக்கள் அனைத்தும் சேர்ந்துதான் நாயைக் கொன்றன என்று நாம் நம்ப வேண்டும். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? செத்துப் போன நாயின் உடலை அழிப்பதற்காக; நாயின் உடலிலிருந்து உருவானவைதான் அந்த புழுக்கள்.

செத்துப் போன விலங்குகளின் மேல் மொய்த்துக் கொண்டிருக்கும் புழுக்கள் வெளியிலிருந்து வந்தவையல்ல. செத்துப்போன விலங்குகளின் உடலில் இருக்கும் புழுக்கள் அனைத்தும், அந்த உடல் சுயமாக உருவாக்கியவை. புற்கள் முதல் மனிதர்கள் வரை, இந்த உலகத்திற்குத் தேவையில்லாத அனைத்து பொருளும் சுயமாக தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை உடையவை. இயற்கை இவ்வாறுதான் படைத்திருக்கிறது.

காய்ச்சலின் போது உடலில் உருவாகும் கிருமிகள், அந்தக் காய்ச்சல் கண்ட நபரின் உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகள் உடலை விட்டு வெளியேறத் துணை புரிகின்றன.

இன்னும் ஒரு உதாரணம் சொல்கிறேன். சாலையோரத்தில் ஒரு எலி செத்துக் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த செத்த எலியை காக்கை தின்று விடுகிறது. அந்த இடம் சுத்தமாகிவிடுகிறது. அதைப்போல் தான் உடலில் ஆபத்தான கழிவுகள் அதிகரிக்கும் போது; உடலில் சுயமாகவே நல்ல கிருமிகளை உருவாக்கி, அபாயகரமான கிருமிகளையும் உடலின் கழிவுகளையும் தின்றுவிட்டு இரத்தம், சிறுநீர், மற்றும் மலம், மூலமாக அவை உடலைவிட்டு வெளியேறி விடுகின்றன.

இவ்வாறு உடலைத் தூய்மைப்படுத்தும் செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, உடலில் காய்ச்சல் உருவாகும். இந்த நேரத்தில் மருத்துவர்கள் இரத்தத்தையோ, சிறுநீரையோ பரிசோதித்துப் பார்த்துவிட்டு; கிருமிகள் இருக்கின்றன என்று கூறுவார்கள். அந்த காய்ச்சலுக்கு கிருமி காய்ச்சல், மலேரியா, டெங்கு, சிக்கின் குனியா, டீ-பீ என்றும் பெயர்களை சூட்டுவார்கள். நாமும் பயந்து கொண்டு அவர்கள் கூறுவதை எல்லாம் செய்து, அவர்கள் கொடுக்கும் மருந்தையெல்லாம் உண்டு. கழிவுகள் உடலை விட்டு வெளியேறாமல் தடுத்து; ஆபத்தான கழிவுகளை உடலின் உள்ளேயே தேக்கி வைத்துக் கொள்வோம்.

காய்ச்சலைத் தடுப்பது எதிர்காலத்தில் கொடிய நோய்கள் உருவாக மிக முக்கிய காரணமாக இருக்கும். இவ்வாறு தேக்கி வைக்கப்படும் கழிவுகள் பின்னாட்களில் கட்டிகள், அடைப்புகள், மூச்சிரைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களாக மாறும். அதனால் காய்ச்சலை எந்தக் காரணத்தைக் கொண்டும் தடுக்கக்கூடாது. காய்ச்சல் என்பது உடல் நன்மைக்காக மட்டுமே உருவாகுமே ஒழிய, காய்ச்சல் ஒரு நோய் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X