விலங்குகளுக்கு மனம் இருக்குமா? இந்த பூமியில் வாழும் உயிரினங்களின் அறிவின் பரிணாம வளர்ச்சி என்பது அறிவே இல்லாத சூனியத்தில் (0) தொடங்கி, படிப்படியாக வளர்ந்து ஒரு (1) அறிவைத் தொட்டு, மேலும் 1.01, 1.02, 1.03 என்று படிப்படியாக ஆறு அறிவு வரையில் வளர்கிறது.
ஆறறிவு என்றதும் எல்லா மனிதர்களுக்கும் ஆறறிவு முழுமையாக இருக்கும் என்று எண்ணக்கூடாது. உண்மையில் எல்லா மனிதர்களுக்கும் முழுமையான ஆறு அறிவு இருப்பதில்லை. 5.01 அறிவு முதல் 6.00 அறிவு வரையில் நூறு நிலைகளில் பல்வேறு விகிதாசாரத்தில் இருக்கும். இதனால்தான் மனிதர்களின் அறிவிலும் புரிதலிலும் வேறுபாடுகள் இருக்கின்றன.
ஐந்து அறிவை தாண்டிய ஆறாவது அறிவையே மனம் என்று குறிப்பிடுகிறோம். ஆறாவது அறிவானது பகுப்பாய்வு செய்வதற்கும், புரிந்துகொள்வதற்கும், முடிவுகள் எடுப்பதற்கும், பயன்படும் அறிவாகும். சில விலங்குகளுக்கு குறிப்பாக மனிதர்களுடன் இணைந்து வாழும் விலங்குகளுக்கு மனம் வளர தொடங்கியிருக்கும்.
விலங்குகளின் மனம் மனிதர்களின் மனதைப் போன்று முழு ஆற்றலுடன் செயல்படுவது கிடையாது. அதே நேரத்தில் மனிதர்களின் மனதைப் போன்று அனைத்து விசயங்களையும் பதிவு செய்வதும் ஆராய்வதும் புரிந்துகொள்வதும் கிடையாது. விலங்குகளின் மனமானது 5.01 முதல் 5.10 அறிவு வரையில் இருக்கலாம். விலங்குகளின் மனமானது தற்காத்துக் கொள்ளும் நினைவாற்றலாக மட்டுமே பெரும்பாலும் செயல்படுகிறது. மனிதர்களுக்கு மட்டுமே மனம் முழுமையாக இயங்குகிறது.