வெற்றியின் சூத்திரம். உன் வாழ்வின் லட்சியம் என்ன? தேவை என்ன? அடைய வேண்டிய தூரம் என்ன? என்பது தெளிவாக உனக்குத் தெரிய வேண்டும்.
அடைய வேண்டிய விஷயத்தில் தெளிவான புரிதல் இருக்க வேண்டும், தெளிவான திட்டமிடல் இருக்க வேண்டும்.
லட்சியத்தை அடையும் வரையில் உன்னை உறங்க விடாத அளவுக்கு உன் திட்டமிடுதல் ஆழமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.
தெளிவாக முடிவு செய்தல், சரியாகத் திட்டமிடுதல், இவற்றுடன் தேவையான உழைப்பும் சேரும் பொழுது உனது லட்சியம் நிச்சயமாக நிறைவேறும்.