பொது

வெள்ளத்தின் போது மின்சாரப் பாதுகாப்பு வழிகாட்டிகள்

Flooded small village with houses

வெள்ளத்தின் போது மின்சாரப் பாதுகாப்பு வழிகாட்டிகள். வெள்ளத்தின் போதும் & அதன் பிறகும் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு கீழ்க்கண்ட மின்சாரப் பாதுகாப்பு வழிகாட்டிகளைப் பின்பற்ற வேண்டும் என வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தெனாகா நேஷனல் பெர்ஹாட் (டி.என்.பி.) வலியுறுத்துகிறது.

வெள்ளத்தின் போது

1. மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகுவதைத் தவிர்க்கும் பொருட்டு மின்னியல் சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிரதான சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

2. நீர் மட்ட அளவு அதிகரிக்குமேயானால், மின்சார விநியோகத்தைத் துண்டிப்பதற்கு 15454 என்ற டி.என்.பி. CareLine எண்களுக்கு அழைக்கவும் அல்லது Facebook TNB CareLine வழியாக தகவல் தெரிவிக்கலாம்.

3. வெள்ள நீரில் மூழ்கிக் கிடக்கும் மின்னியல் சாதனங்கள் அல்லது மின்சாரக் கம்பிகளைத் தொடக்கூடாது அவை இன்சுலேஷன் பூசப்பட்டிருந்தாலும் ஆபத்துதான்.

4. மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகுவதைத் தவிர்க்கும் வகையில் நீரில் மூழ்கிக் கிடக்கும் மின் கம்பங்கள் மற்றும் டி.என்.பி. நிறுவனங்களிலிருந்து (installations) ஒதுங்கியே இருக்க வேண்டும்.

5. அனைத்து மின் சாக்கெட்டுகளும் ஆஃப் செய்யப்பட்டிருக்க வேண்டும். மற்றும் அனைத்து மின்னியல் சாதனங்களும் மின்சாரத் தொடர்புகளில் இருந்து அகற்றப்பட்டிருக்க வேண்டும்.

6. உங்கள் வீட்டில் solar PV பொருத்தப்பட்டிருந்தால், அதை உடனே ஆஃப் செய்து விடுங்கள். மின்சார விநியோகம் உங்கள் வீட்டு மின்கம்பி தொடர்புகளால் மீண்டும் ஈர்க்கப்படுவதை இதன் வழி தவிர்க்கலாம்.
வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக பிரதான சுவிட்சை (main switch) ஆஃப் செய்யுங்கள்.

வெள்ளத்திற்குப் பிறகு

1. வீட்டில் எந்த மின்னியல் சாதனங்களையும் சுத்தம் செய்வதற்கு முன்னதாக பிரதான சுவிட்சை (main switch) ஆஃப்” செய்ய வேண்டும்.

2. வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட அனைத்து மின்னியல் சாதனங்கள் மற்றும் மின்சார சுவிட்சுகளை பயன்படுத்துவதற்கு முன்னதாக எரிபொருள் ஆணையத்திடம் பதிவு பெற்றுள்ள மின்னியல் குத்தகையாளரால் அவை முதலில் பரிசோதிக்கப்பட வேண்டும்.

3. மின்சாரக் கம்பிக்கு மிக அருகில் உள்ள மரக்கிளைகளைத் தொடக்கூடாது. அவற்றில் இன்னும் மின்னோட்டம் இருக்கக்கூடும் என்பதே இதற்குக் காரணமாகும். உடனடி நடவடிக்கைக்காக டி.என்.பி. உடன் தொடர்பு கொள்ளுங்கள்.

4. மின்சாரக் கம்பிக்கு மிக அருகில் எஃகு/அலுமினிய ஏணிகள் அல்லது கம்பங்களைப் பயன்படுத்தக் கூடாது.

5. பிள்ளைகளைப் பெற்றோர்கள் எப்போதும் கண்காணிக்க வேண்டும். கீழே விழுந்து கிடக்கும் மின் கம்பங்கள் அல்லது அறுந்த
மின் கம்பிகளை அவர்கள் தொடாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

6. வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக பிரதான சுவிட்சை (main switch) ஆஃப் செய்யுங்கள்.

7. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மின்சார விநியோகம் குறித்து ஏதேனும் பிரச்சினைகளோ அல்லது விவகாரங்கள் இருக்குமேயானால் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். மின்சார விநியோகம் மற்றும் சேவைகள் தொடர்பான மேல் விவரங்களுக்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியது: தொடர்புக்கு TNB CareLine at 15454 | முகநூல் TNB CareLine | www.tnb.com.my.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field