ஆரோக்கியம்

வெள்ளை நிற உணவுகள் தீங்கை விளைவிக்கும்

வெள்ளை நிற உணவுகள் தீங்கை விளைவிக்கும். புகையிலை, மது, மற்றும் போதைப் பொருட்கள், மட்டுமின்றி தூய வெள்ளை நிறத்தில் இருக்கும் அனைத்து உணவுகளும் உடலுக்குத் தீங்கை விளைவிக்கக் கூடியவை.

நாம் தினமும் பயன்படுத்தும், உடலுக்குத் தீங்கை விளைவிக்க கூடிய வெண்மையான உணவு வகைகள்.

 • மைதா மாவு
 • வெண்மையாக்கப் பட்ட மாவு வகைகள்
 • பாக்கெட் பால்
 • பாக்கெட் தயிர்
 • பாக்கெட் தூள் உப்பு
 • வெள்ளை சீனி
 • சுவையூட்டிகள்
 • பட்டைத் தீட்டப்பட்ட அரிசி
 • வெள்ளை நிற பிராய்லர் கோழி
 • பிராய்லர் கோழி முட்டை
 • மற்றும் தூய வெள்ளை நிறத்தில் கிடைக்கும் அத்தனை உணவு வகைகளும்.

இந்த உணவுகள் எவ்வாறு உடலுக்குத் தீங்கை விளைவிக்கின்றன?

இயற்கையின் படைப்பில் மனிதர்களுக்கு உகந்த எந்த உணவும் தூய வெள்ளை நிறத்தில் படைக்கப்படவில்லை. தூய வெள்ளை நிறம் வருவதற்காக பல இரசாயனங்கள் பதப்படுத்தப்படும் உணவுகளில் கலக்கப்படுகின்றன. உணவுகளை வெண்மையாக்க கலக்கப்படும் Sulfur Dioxide, Phosphoric Acid, Calcium Hydroxide, Polyacrylamide, Benzoyl peroxide, Calcium peroxide, Nitrogen dioxide, Chlorine, Chlorine dioxide, Azodicarbonamide போன்ற இரசாயனங்கள்; உடலுக்குள் நுழையும் போது பலவகையான தீங்குகளை விளைவிக்கின்றன.

உணவு பொருட்களை பதப்படுத்த, மனம் மற்றும் வர்ணத்தை நீக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்களை அந்த உணவுப் பொருட்களில் இருந்து நீக்கிவிட முடியாது. நாம் மேலே குறிப்பிட்ட உணவு வகைகளை உட்கொள்ளும் போது இந்த இரசாயனங்களையும் சேர்த்துத் தான் உட்கொள்கிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அது மட்டுமின்றி, உணவுப் பொருள் வெண்மையாக இருக்க அந்த உணவிலிருந்து சில முக்கியமான, உடலுக்கு நன்மையைத் தரக்கூடிய விசயங்கள் நீக்கப்படுகின்றன. அவை நீக்கப்பட்ட பிறகு அந்த உணவுகள் முழுமையான, மனித உடலுக்கு உகந்த உணவாக இருக்காது. உதாரணத்துக்கு பாலின் உண்மையான நிறம் லேசான மஞ்சள் நிறம், பாக்கெட் பாலிலிருந்து மனிதனுக்கு நன்மை தரக்கூடிய கால்சியம், கொழுப்பு போன்றவை நீக்கப்பட்ட பிறகு பால், தூய வெள்ளை நிறமாக மாறுகிறது. பாலில் இருக்கும் கால்சியம் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பின்னர் மீதம் இருப்பவை மனித உடலுக்கு ஒவ்வாதவை மட்டுமே, அதை எதற்காக உட்கொள்ள வேண்டும்?

மாவு வகைகளும் அப்படிதான், அரிசி மாவு லேசான மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். ஆனால் தூய வெள்ளை நிறத்தில் இருக்கிறது. காரணம் அரிசியின் மேற்புறத்தில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் பல நன்மையான விசயங்கள் நீக்கப்படுகின்றன மேலும் அதில் மாவை வெண்மையாக்கக் கூடிய சில இரசாயனங்களும் கலக்கப்படுகின்றன.

 • மைதா மாவைப் பயன்படுத்தாதீர்கள்.
 • மாவு வகைகளை பாக்கெட்டில் வாங்காமல், சொந்தமாக அரைத்துக் கொள்ளுங்கள்.
 • பாக்கெட் பால் வேண்டாம் கறந்த பாலை வாங்குங்கள்.
 • பாக்கெட் தயிர் வேண்டாம், தயிரை வீட்டிலேயே சொந்தமாக உறைய வையுங்கள்.
 • பாக்கெட் உப்பு வேண்டாம் மூட்டைகளில் வரும் கல்லுப்பை பயன்படுத்துங்கள்.
 • வெள்ளை சீனி வேண்டாம் நாட்டுச் சர்க்கரை, வெள்ளம், பயன்படுத்துங்கள்.
 • சமையலில் சுவையூட்டிகளைப் பயன்படுத்தாதீர்கள்.
 • பட்டைத் தீட்டிய அரிசி வேண்டாம், பட்டைத் தீட்டாத அரிசியைப் பயன்படுத்துங்கள்.
 • வெள்ளை நிற பிராய்லர் கோழி வேண்டாம், நாட்டுக் கோழியைப் பயன்படுத்துங்கள்.
 • பிராய்லர் கோழியின் முட்டை வேண்டாம், நாட்டுக் கோழியின் முட்டையைப் பயன்படுத்துங்கள்.

செயற்கையான முறையில் வெண்மையாக்கப் பட்ட எந்த உணவு வகைகளையும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கும், குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டாம். மனிதர்களின் மனம் மட்டும் வெண்மையாக இருந்தால் போதும், உணவு வெண்மையாக இருக்கக் கூடாது. மனம் வெண்மையாக இருந்தால் ஆரோக்கியம், உணவு வெண்மையாக இருந்தால் நோய்.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X