பொருளாதாரம்

இவற்றைச் சரிசெய்தால் வீட்டில் செல்வம் சேரும்

Empty Living Room

இவற்றைச் சரிசெய்தால் வீட்டில் செல்வம் சேரும். வீட்டில் பணம் தங்குவதில்லை, வீண் விரயம் ஆகிறது அல்லது அதிகப்படியான செலவு, எதிர்பாராத செலவு ஆகிறது என்று வருத்தப் படுபவர்களுக்கு. வீட்டில் செல்வம் சேருவதற்கும் சேர்த்த செல்வம் நிலைப்பதற்கும் சரி செய்ய வேண்டிய சில விசயங்கள்.

1. வீட்டுக் கட்டிடம், வீட்டைச் சுற்றி இருக்கும் தரையை விடவும், சாலையை விடவும் பள்ளமாக இருக்கக் கூடாது.

2. வீடு முச்சந்தி வீடாக இருக்கக் கூடாது, எந்த நேரத்திலும் இருட்டாக இருக்கக் கூடாது.

3. பொழுது சாயும் நேரங்களில் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் அல்லது லைட் எரிய வேண்டும். காலை வரையில் அணைக்கக் கூடாது.

4. வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது. சாம்பிராணி, ஊதுபத்தி, மலர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வீட்டை மனமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

5. வீட்டில் மஞ்சள் அல்லது சிவப்பு வர்ண மின்சார விளக்கை எரியவிடுவது நல்லது. வீட்டில் ஏதாவது ஒரு அறையில் அல்லது சாமி அறையில் அந்த மின்சார விளக்கை (லைட்டை) எரியவிடலாம்.

6. காற்றும் வெயிலும் வீட்டின் உள்ளே வந்து போகும் அளவில் ஜன்னல் திறந்து இருக்க வேண்டும்.

7. வீட்டின் நுழை வாயிலில் கதவின் முன்னாள் செருப்பை கழட்டிப் போடக் கூடாது. ஓரமாக வைக்க வேண்டும்.

8. வீட்டில் பழைய, உடைந்த, பழுதான, அல்லது உபயோகம் படுத்த முடியாத பொருட்களை சேர்த்துவைக்கக் கூடாது, பீடை உண்டாகும்.

9. வீட்டில் இருக்கும் பழைய துணிமணி, பழைய பயன்படுத்தாத பொருட்கள், உடைந்த பொருட்கள் அனைத்தையும் வெளியில் வீசிவிடுங்கள்.

10. திங்கள் மற்றும் வியாழன் கிழமை மாலையில் ஆறு மணிக்கு மேல் ஊதுபத்தி ஏற்றி வைப்பது நல்லது.

11. உரிமை உள்ளவர்களுக்கும் ஏழைகளுக்கும் இருக்கும் செல்வத்தில் இருந்து சிறிதளவு கொடுக்க வேண்டும்.

12. தற்போது உங்களிடம் இருக்கும் அனைத்துக்காகவும் இறைவனுக்கு தினம் நன்றி கூறுங்கள்.

13. முந்தைய ஜென்மங்கள் இருந்து இன்று வரையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த அனைத்துப் பாவங்களுக்கும் இறைவனிடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்.