வறட்டு இருமல் குணமாக வீட்டு மருத்துவம்.
ஒரு நபருக்கு சிகிச்சை செய்ய தேவையான பொருட்கள்
1. புழுங்கல் அரிசி இரண்டு கைப்பிடி அளவு
2. சிறிய வெங்காயம் 50 கிராம்
3. நல்லெண்ணெய் தேவையான அளவு
இரண்டு கைப்பிடி புழுங்கல் அரிசியை மண் சட்டியில் போட்டு இளம் சூட்டில், இலேசாகப் பொரியும் அளவுக்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அரிசி கருகிவிடாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
வறுத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் அம்மியைக் கொண்டு அல்லது மிக்ஸரை பயன்படுத்தி அரைத்து மாவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஐம்பது கிராம் சிறிய வெங்காயத்தை அந்த மாவுடன் சேர்த்து, அந்த மாவைப் பிசையக் கூடிய அளவுக்கு நல்லெண்ணெய் சேர்த்துக் கிண்டி, பிசைந்துகொள்ள வேண்டும்.
அவற்றை விழுங்கக் கூடிய அளவுக்கு சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு.
காலை நேரத்தில் காலியான வயிற்றில் ஐந்து அல்லது ஆறு உருண்டைகளை உட்கொள்ள வேண்டும்.
பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீர் அருந்த வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு உட்கொண்டு வந்தால் வறட்டு இருமல் முழுமையாகக் குணமாகும்.