வாழ்க்கையில் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.
1. எதற்கும், யாருக்கும் அஞ்சக்கூடாது. எதிலும் துணிந்து நிற்க வேண்டும்.
2. அனைவரையும் நம்பக் கூடாது அதேபோல் அனைவரையும் சந்தேகப்படக்கூடாது.
3. கண்மூடி தனமாக அனைத்தையும் நம்பக் கூடாது, அனைத்தையும் கேள்வி கேட்க வேண்டும்.
4. அனைவருக்கும் பதில் சொல்லக்கூடாது, சில விஷயங்களை ஒதுக்கி தள்ள வேண்டும்.
5. வாழ்க்கை எந்த நேரமும் மாறக் கூடியது அதனால் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
6. அனைத்தையும் கடந்து போகும் மனப்பக்குவம் இருக்க வேண்டும்.
7. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க வேண்டும், ரசிக்க வேண்டிய இடத்தில் ரசிக்க வேண்டும், மௌனம் காக்க வேண்டிய இடத்தில் மௌனமாக இருக்க வேண்டும்.
8. முகத்தாச்சினை பார்க்காமல் இல்லை முடியாது என்று கூற கற்றுக்கொள்ள வேண்டும்.
9. வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது, தினம் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
10. கால, நேர, சூழ்நிலைக்கு, ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
Leave feedback about this