பலாப்பழத்தின் மேற்புறத்தில் சொரசொரப்பாக அழகின்றி இருந்தாலும் உள்ளே இனிப்பான சுவையான பழம் இருக்கும். பலாப்பழத்தைத் திறந்து பார்க்காமல் அதன் தோலையே வேடிக்கைப் பார்ப்பதைப் போன்று. வாழ்க்கையில் எது நடந்தாலும் ஏன் நடக்கிறது? அதன் நோக்கம் என்ன? என்று சிந்திக்காமல் அந்த நிகழ்வுகளை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பதால் வாழ்க்கை போராட்டமாகத் தெரிகிறது.