வாழ்க்கை அனுபவங்களால் உருவாகும் பாதிப்புகள். ஒரு விசயத்தை பற்றி கலந்துரையாடும் போது, சிலர் அந்த விசயம் நடக்காது, கிடைக்காது, வெற்றி பெறாது, என்று எதிர்மறையாகப் பேசுவார்கள். வேறு சிலரோ அந்த விசயம் நிச்சயமாக நடக்கும், கிடைக்கும், வெற்றிபெறும் என்று நேர்மறையாகப் பேசுவார்கள். சரி ஒரு விசயம் வெற்றிபெறும் என்றோ வெற்றிபெறாது என்றோ எதைவைத்து முடிவுக்கு வருகிறார்கள்?
மனதில் பதிந்துவிட்ட பதிவுகளையும், வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களையும் கொண்டுதான் ஒரு விசயம் நடக்கும் – நடக்காது, வெற்றிபெறும் – வெற்றிபெறாது, என்று முடிவுகளை எடுக்கிறார்கள். மனதில் உள்ள பதிவுகளைக் கொண்டு முன்முடிவை உருவாக்கி அதனை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
குழந்தைப் பருவத்தில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு சிறுவர் பருவத்தையும், சிறு வயதில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு இளமையையும், இளமையில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டது, வாழ்க்கையின் அடுத்த பகுதியையும் வாழ்கிறார்கள்.
ஒவ்வொரு பருவத்தின் அனுபவங்களும் வாழ்க்கையின் அடுத்த பருவத்தை முடிவு செய்வதால், வாழ்க்கையின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்பதை நிகழ்காலம் தான் முடிவு செய்யப்போகிறது. அதனால் ஒவ்வொரு நாளையும் பயனான நாளாக விழிப்புணர்வுடன் வாழுங்கள்.
Leave feedback about this