வலி உடலுக்கு நன்மையானது, அது உடலின் தேவைக்காகவே உருவாகிறது. தொடக்கத்தில் வலி, லேசாகத்தான் இருக்கும் அந்த வலியை இரசாயன மருந்துகள், எண்ணெய்கள், கிரீம் போன்றவற்றைக் கொண்டு அடக்கும் போது, நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. நோயைக் குணப்படுத்த உடல் அதிக உழைப்பையும் சக்தியையும் விரயமாக்குவதால் கூட சிலவேளைகளில் வலி அதிகரிக்கும்.
வலிகளுக்குத் தீர்வு
உடலின் தொந்தரவும் வலியும் லேசாக இருக்கும் போதே, உடல் உழைப்பைக் குறைத்து, முக்கியமாக உணவைக் குறைத்து, உடலுக்குப் போதிய ஓய்வுக் கொடுத்தால், வலி தொடக்கக் கட்டத்திலேயே குறைந்து மறைந்துவிடும்.
இரவில் வெறும் வயிற்றில் உறங்குவது, நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். அதிகப்படியான பசி இருந்தால் பழங்களை மட்டும் சாப்பிடலாம். கண்டிப்பாக இரவு 9 மணிக்குள் படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும்.
இவ்வாறு செய்தால் வலி படிப்படியாக குறைந்து மறையும், உடலின் பாதிப்புகளும் குணமாகும்.