வயிற்றுப்போக்கு குணமாக வீட்டு மருத்துவம். வயிற்றுப்போக்கு குணமாக பயன்படுத்தி பயன்பெற்ற வீட்டு மருத்துவம்.
1. சிறிய சுக்கு (1 ½ இன்ச்) ஒன்றை எடுத்து, அதன் மேல் தோலை நீக்கிவிட்டு தண்ணீரில் நனைத்து லேசாக தட்டிக் கொள்ளவும்.
2. பிறகு அதை, தூள் உப்பில் முழுமையாகப் புரட்டி எடுத்துக் கொள்ளவும்.
3. உப்பில் புரட்டிய சுக்குத் துண்டை இடுக்கியால் பிடித்துக்கொண்டு, மேல் தோல் காயும் வரையில் நெருப்பில் சுட்டுக் கொள்ளவும்.
4. பிறகு அதை நன்றாக தட்டி ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் சிறிய நெருப்பில் கொதிக்க விடவும்.
5. ஐந்து நிமிடங்கள் கொதித்த பிறகு, அதை வடிகட்டி சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடித்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.
6. ஓரிரு முறை குடித்துவர முழுமையான பலனைப் பெறலாம்.
Gowri
9345089064
gowriakshayaa21@gmail.com
Leave feedback about this