பொது

வாகனத்தில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருள்

வாகனத்தில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருள்

வாகனம் வைத்திருக்கும் நபர்கள் பெரும்பாலும் அதில் வாசனைத் திரவியங்களைத் தொங்க விட்டிருப்பார்கள். வாகனத்தில் பயணிக்கும் அத்தனை நேரமும் சுவாசம் மூலமாக அதன் வாசனையும், அந்த வாசனைப் பொருளில் கலந்திருக்கும் ரசாயனங்களும் அந்த வாகனத்தில் பயணிக்கும் நபர்களின் உடலுக்குள்ளும் செல்கின்றன.

எதிலிருந்து செய்யப்படுகிறது என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகின்றன என்பது எதுவும் தெரியாமல் வாசனை வருகிறது என்று ஒரே காரணத்திற்காக வாகனத்தில் தொங்க விட்டு அதில் கலந்து இருக்கும் அத்தனை ரசாயனங்களையும் மனித உடலுக்குள் நுழைய வழிசெய்கிறோம். அந்த செயற்கை வாசனைத் திரவியத்தில் கலந்திருக்கும் இரசாயனங்கள் அந்த வாகனத்தில் பயணிக்கும் நபர்களின் உடலுக்குள் சுவாசம் மூலமாக நுழைந்து, நுரையீரலைப் பாதிக்கிறது மேலும் இரத்தம் மூலமாக உடல் முழுவதும் பரவி பலவகையான உடல் உபாதைகளை உருவாக்கக்கூடும்.

வாகனத்திலும், வீட்டிலும், வியாபாரத் தலங்களிலும், இவற்றைப் போன்ற செயற்கை வாசனைகளைப் பயன்படுத்தாமல், நல்ல நறுமணத்தைத் தரக்கூடிய மலர்கள், தாவரங்கள், பழங்களின் தோல்கள், மூலிகைகள், வேர்கள், இலைகள், போன்றவற்றைப் பயன்படுத்துவது சிறந்தது. இவற்றைப் பயன்படுத்தும் போது இயற்கையான வாசனை கிடைக்கும், மேலும் அவை உடலுக்கு எந்த வகையான தீங்கையும் விளைவிக்க மாட்டா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X