வாழ்க்கை

வாழ்க்கையை திட்டமிட்டு வாழுங்கள்

  1. உங்கள் வாழ்க்கையின் இலக்கு எது?
  2. உங்கள் வாழ்க்கையில் எதை அடைய விரும்புகிறீர்கள்?
  3. எதை அடைந்தால் உங்களுக்கு முழுமையான திருப்பதி கிடைக்கும்?
  4. உங்களின் முதுமை கால வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும்?

இவை அனைத்தையும் இப்போதே முடிவு செய்துகொள்ளுங்கள்.

இவற்றை அடையத் தேவையான விசயங்களைத் திட்டமிடுங்கள். உங்கள் இலக்கை அடைய நெடுங்கால திட்டம் (10 ஆண்டுகள்), இடைக்கால திட்டம் (5 ஆண்டுகள்), குறுகிய கால திட்டம் (1 ஆண்டு) என்று மூன்று திட்டங்களை வகுத்துக்கொள்ளுங்கள்.

இலக்கை அடையத் தேவையான வகையில் தினசரி வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இலகுக்கும் ஒவ்வொரு பாதையில் பயணிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு, உங்கள் இலக்குக்குத் தேவையான பாதையைத் தேர்ந்தெடுத்து பயணத்தைத் தொடங்குங்கள்.

தற்போது எந்த நிலையில் இருந்தாலும் இங்கிருந்து ஒரு படி மேலே சொல்ல முயற்சி செய்யுங்கள். 100 இல் இருந்து 200 என்ற நிலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை ஆனால் குறைந்தபட்சம் 100 இல் இருந்து 110க்கு செல்ல முயல வேண்டும்.

அறிவியல், ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரம், போன்ற பயனான விஷயங்களை வாசிக்க மற்றும் கற்றுக் கொள்ளத் தொடங்குங்கள். தினமும் குறைந்தது 10 பக்கங்கள் வாசிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

புதிய தொழில்களையும் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொள்ளுங்கள். பல்வேறு வகையில் பொருளீட்ட வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். அதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வருமானத்தில் இருந்து குறைந்தது 40 விழுக்காடு பணத்தைச் சேமிக்க முயற்சி செய்யுங்கள். 40 விழுக்காடு சேமிக்க முடியாத அளவுக்கு வருமானம் குறைவாக இருந்தால் வருமானத்தை அதிகரிக்கத் தேவையான முயற்சிகளில் இறங்க வேண்டும். வாழ்க்கை செலவினங்களைக் குறைத்துக் கொண்டு பணத்தைச் சேமிக்க வேண்டும்.

தற்போது கையில் இருக்கும் சேமிப்பை குறைந்தது ஆண்டுக்கு பத்து விழுக்காடு வளர்ச்சி அடையக்கூடிய தங்கம், வெள்ளி, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், போன்ற பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். யாரிடமும் ஏமாந்து விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மன நிம்மதி, ஆரோக்கியம், புகழ், செல்வம், குடும்பம், சமுதாயம், ஆன்மீகம், முதுமை, மரணத்துக்குப் பிந்திய வாழ்க்கை இவற்றில் கவனம் செலுத்தி, இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

நல்லதே நடக்கும் – சந்தோசம்.