வாழ்க்கையை பரீட்சையாக எண்ணி
பலர் பதில் எழுதத் துடிக்கிறார்கள்
சிலர் கதைகளாக எண்ணி
கற்பனையில் மிதக்கிறார்கள்
வாழ்க்கை அனைவருக்கும் சமமல்ல
தகுதிக்கு ஏற்ப கொடுக்கப்படுகிறது
வாழ்க்கை என்றும் நிரந்தரமல்ல
தகுதிக்கேற்ப மாறக்கூடியது
சிலருக்குக் கவிதை, சிலருக்குக் கட்டுரை
சிலருக்கு அகராதி, சிலருக்குக் கதை
சிலருக்கு நாவல், சிலருக்குச் சரித்திரம்
சிலருக்கு வெற்று காகிதம்
கொடுக்கப்பட்டதை முதலில் ஆராய்ந்து
புரிந்துக் கொள்ளுங்கள் – பிறகு
வாழத் தொடங்குங்கள்
Leave feedback about this