வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி?
மனித வாழ்க்கையில் தீர்வு இல்லாத பிரச்சனை என்று எதுவுமே இருக்காது. வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும் என்றால். முதலில் அந்த பிரச்சனை உருவாக காரணமாக இருந்தவற்றை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.
எந்த ஒரு பிரச்சனையையும் அதன் ஆணிவேர் எங்கே இருக்கிறது? அந்த பிரச்சனை எந்த புள்ளியில் தொடங்குகிறது? என்பதை ஆராய்ந்தால் எளிதாக அதற்கான தீர்வை அறிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு நோய்க்கும் மருந்திருக்கும், ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்விருக்கும். நாம்தான் மருந்தையும் தீர்வையும் தேடி அறிந்துகொள்ள வேண்டும்.