மாடி வீடு, ஏசி கார்
வயல்வெளி, சிறிது காணி
வங்கியில் ரொக்கம்
வாழத் தேவையான
அனைத்தையும் சேர்த்துவிட்டேன்
வாழத் தொடங்கலாம் என்று
எண்ணும் போதுதான் உணர்ந்தேன்
இதற்கு மேல் வாழ்வதற்கு
எதுவுமில்லை என்பதை
விழித்துக் கொண்ட பின்புதான்
இது கனவு என்பதை உணர்ந்தேன்
வாழ்க்கையை உணரும் நேரத்திலே
வாழ்வின் முடிவுக்கு வந்துவிட்டேன்
எதிர்காலம் எனும் கனவினிலே
நிகழ்காலம் தொலைத்துவிட்டேன்
வாழ்க்கையின் இடையில் – பணம்
தேடவேண்டும் என்பதை உணராமல்
வாழ்க்கையைத் தொலைத்து
பணத்தைச் சேர்த்தேன்
சேர்த்த செல்வங்களில்
பாதி ஊருக்கு, பாதிப் பேருக்கு
பாதி மருத்துவமனைக்கு
மீதம் இருந்தால்
என் பிள்ளைகளுக்கு
உடலைப் பிரிந்த உயிர்
வில்லிலிருந்து சீரிய அம்பு
கூறிவிட்ட வார்த்தை மட்டுமல்ல
இழந்துவிட்ட இளமையும்
நிச்சயமாகத் திரும்புவதில்லை