ஏக்கம் கவிதை

உயிர் கொத்திப் பறவை

உயிர் கொத்திப் பறவை
ஒவ்வொரு நொடியும் – என்
உயிர் குடிக்கும் அவள்

என்னுயிர் குடித்து
அவள் வாழ்கிறாள்
என்ன தாகமோ
என்று அடங்குமோ

பூமியின் உயிர் குடித்து
வளரும் மரம்
கனிகளை மனிதர்களுக்குக்
கொடுப்பதைப் போன்று

என்னுயிர் குடித்து
வளரும் அவள் – அன்பை
அவனிடம் காட்டுகிறாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *