உதவிகளில் எது பெரியது? எது சிறியது?
உதவிகளில் பெரியது சிறியது என்பது, அந்த உதவியை பெரும் நபரின் தேவையையும் சூழ்நிலையையும் பொறுத்தது. அவசரக் காலத்திலோ, ஆபத்தான சூழ்நிலையிலோ இருப்பவர்களுக்கு மிகவும் சிறிய உதவிக்கூட மிகப்பெரிய உதவியாகத் தெரியும். தேவை அற்றவர்களுக்கு மிகப் பெரிய உதவியும் சிறியதாகத் தான் தெரியும்.
பசியுடன் இருப்பவர்களுக்கும் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பவர்களுக்கும் வழங்கப்படும் உதவிதான் மிகவும் பெரியது.