உண்மையான நோய்களும், நோய்க்கான காரணங்களும். உடலில் ஏதாவது தொந்தரவு உருவானால், அந்த தொந்தரவை மட்டுமே எண்ணி பலர் பயந்து கொண்டிருப்பார்கள். அந்த தொந்தரவு எதனால் உருவானது என்று சிந்திக்காமல், எவ்வாறு சரி செய்வது என்பதில் மட்டுமே பலரது சிந்தனை இருக்கும். ஒரு நோய் உருவாக காரணமாக இருந்தவற்றை சரி செய்யாமல் நோயை எவ்வாறு குணப்படுத்த முடியும்?
1. கண் நோய், பார்வைக் கோளாறு, மற்றும் கண் கட்டிக்கு, கண் காரணம் இல்லை.
2. சளி, மூக்கடைப்பு, சைனஸ், மற்றும் மூச்சிரைப்புக்கு, மூக்கு காரணம் இல்லை.
3. காது வலி, காது அடைப்பு, காது அரிப்பு, மற்றும் கேட்கும் திறன் குறைவுக்கு காது காரணம் இல்லை.
4. வாய், நாக்கு, உதட்டுப் புண்ணுக்கும், வாய் துர்நாற்றத்திற்கும், காரணம் வாயோ, நாக்கோ அல்ல.
5. தோல் நோய், புண், வெண்குஷ்டம், ஒவ்வாமை, அரிப்பு, முடி கொட்டுதல், மற்றும் பொடுகுக்கான காரணம் தோல் அல்ல.
தொந்தரவு தோன்றும் இடத்தில் தான் உண்மையான நோய் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. இதனால் தான் என்ன வைத்தியம் செய்தாலும், இந்த நோய்கள் குணமாவதில்லை. இந்த நோய்களுக்கான உண்மைக் காரணத்தை கண்டறிந்து மருத்துவம் செய்தால் தவிர, இவற்றைச் சரிசெய்ய முடியாது. நோயின் மூலக் காரணத்தைக் கண்டறியாதவர்களால், இவற்றைச் சரிசெய்ய நிச்சயமாக முடியாது. நோய்கள் பலவாக இருந்தாலும், அவற்றைக் குணப்படுத்த, சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவைதான். தனித்திரு, விழித்திரு, பசித்திரு.
தனித்திரு – கவலை, துக்கம், கர்வம், பயம், எரிச்சல், போன்ற எந்த கெட்ட குணங்களும் மனதை அண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தனி உயிர், எந்த சூழ்நிலைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை, என்பதை உணர்ந்து மன அமைதியுடன் தனித்திருங்கள்.
விழித்திரு – உடலில் என்ன நடக்கிறது? ஏன், எதனால், நடக்கிறது என்று விழிப்பாக கவனியுங்கள், புரிந்துகொள்ளுங்கள்.
பசித்திரு – பசி எனும் உணர்வை உணருங்கள். நன்றாக பசி உருவாகும் வரையில் காத்திருங்கள். பசித்தால் மட்டும் உணவை உட்கொள்ளுங்கள். பசி இல்லாமல் அமிர்தமாக இருந்தாலும் உண்ணாதீர்கள். பசி அடங்கியவுடன், உடனே உண்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இவை மூன்றையும் பின்பற்றினால். எந்த நோயாக இருந்தாலும் மருந்து மாத்திரைகளின் தேவையில்லாமல் அவை தானாக குணமாகும்.
Leave feedback about this