உண்மையைச் சொல்வதானால்
காதலிப்பதைவிடவும்
காதலிக்கப்படுவதே
உண்மையான காதலாகும்
கவிதை எழுதுவதைக் காட்டிலும்
கவிதையை வாசிப்பதில்
அடையும் இன்பத்தைப் போன்றது
அழகிய மலரை
சூடிக்கொள்வதைக் காட்டிலும்
அதனை இரசிப்பதில்
அடையும் இன்பத்தைப் போன்றது
காற்றை சுவாசிப்பதைக் காட்டிலும்
அது தென்றலாக உரசுகையில்
அடையும் இன்பத்தைப் போன்றது
உன்னை நேசிக்கும் நபரின்
உணர்ச்சி பாவங்களை எண்ணிப்பார்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
காதல் வரைந்த ஓவியமாக
அன்பு கலந்த கவிதையாக