உங்களை மிகவும் கவர்ந்த விசயம் எது? காலை சூரியன், அந்தி வானம், இரவின் நட்சத்திரங்கள், கடற்கரையில் வேடிக்கை, மக்கள் கூட்டம், உறவு நட்பு, மரக்கிளையில் பறவை, தெரு ஓரத்தில் நாய் பூனை, சுடச் சுட பிரியாணி, முறுவலான தோசை, ஆவி பறக்கக் காபி, பிடித்த வாசிப்பு, தனிமையில் பிடித்த படம் பாடல், என்று உங்களைக் கவர்ந்த பல விசயம் இந்த பூமியில் இருக்கின்றன அல்லவா?
வாழ்க்கை என்பது ஒரு நேர்பாதை பயணம், ஆனால் அந்தப் பாதை வட்டமாக இருக்கும். ஒவ்வொரு மனிதனும் அந்த வட்டத்தில் நேராகப் பயணிக்க நேரிடும். வாழ்க்கையில் பயணிக்கும் போதே உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் ஒவ்வொரு விசயத்தையும் ரசித்துக் கொண்டே போங்கள் அனுபவித்துக் கொண்டே போங்கள். இது ஒருவழிப் பாதையாகக் கூட இருக்கலாம் மீண்டும் அவற்றை அனுபவிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.