ஆரோக்கியம்

உங்கள் சிறுநீர் அழுக்காக இருக்கிறது

Urinals on Men's Restroom urine
#image_title

உங்கள் சிறுநீர் அழுக்காக இருக்கிறது, அதில் சர்க்கரை இருக்கிறது, அதில் கிருமிகள் இருக்கின்றன. உங்கள் சிறுநீரில் கழிவுகள் இருக்கின்றன, உங்கள் சிறுநீரில் கழிவுகள் இருப்பதனால் உங்கள் உடலின் உள்ளேயும் கழிவுகள் இருக்கும், உங்களுக்கு நோய்கள் இருக்கும் என்று யாராவது சொன்னால்.

அங்கே இரண்டு விடயங்களை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒன்று அந்த நபருக்கு உடலியலைப் பற்றி முழுமையாகப் புரியவில்லை அல்லது அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்று அர்த்தம். ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், சிறுநீர் என்பதே உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும் வழிதான். உடலில் உள்ள கழிவுகள் சிறுநீரின் மூலமாக வெளியேறுவதால், சிறுநீர் அழுக்காகத்தான் இருக்கும்.

அது மட்டுமல்ல சிறுநீரில் கழிவுகள், கிருமிகள் அல்லது சர்க்கரை இருந்தால், அந்தக் கழிவு அல்லது கிருமி உடலை விட்டு வெளியேறி விட்டது என்று தான் பொருள் கொள்ள வேண்டுமே ஒழிய, சிறுநீரில் இருப்பதனால் உடலின் உள்ளேயும் இருக்கும் என்று பொருள் கொள்ளக் கூடாது. சிறுநீரில் இருக்கும் கழிவுகள் உடலின் உள்ளேயும் இருக்கும் என்று சொல்வது வியாபாரத்துக்காக கூறப்படும் பொய் மட்டுமே.

சிறுநீரின் மூலமாக ஒரு பொருள் உடலை விட்டு வெளியேறி விட்டால், அந்தப் பொருள் உடலின் உள்ளே இல்லை அல்லது குறைந்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஒரு உதாரணத்துக்காகச் சொல்கிறேன்; உணவை உட்கொண்ட ஒருவர் வாந்தி எடுத்து உண்ட உணவு வெளியேறினால், உடலின் உள்ளே உணவு இருக்கிறது என்று அர்த்தமா? அல்லது உணவு வெளியேறி விட்டது என்று அர்த்தமா?

ஒரு பகுதி வெளியேறி விட்டது என்று சொல்லலாம் அல்லது முழுதாக வெளியேறி விட்டது என்று சொல்லலாம். இவை இரண்டையும் விட்டுவிட்டு வாந்தியில் உணவு வெளியேறியதால், உடலின் உள்ளேயும் உணவு இருக்கும் அல்லது வெளியேறியதை விடவும் அதிகமாக உள்ளே இருக்கும் என்று சொன்னால் அது பொய் என்பது உங்களுக்கே புரிகிறது அல்லவா?

அதைப்போல் தான் சிறுநீரின் மூலமாக உடலில் உள்ள கழிவுகள் வெளியேறினால். உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன. உங்கள் உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றும் தன்மையுடன் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். சிறுநீரை காரணமாகக் காட்டி யாராவது பயமுறுத்தினால் பயம் கொள்ளாதீர்கள்.

ஒரு மனிதனுக்கு ஏற்படும் பயம் போதும், அவனைக் கொல்வதற்கு. எதற்கும் பயம் கொள்ளாதீர்கள் தைரியமாக இருங்கள். சிறுநீரின் மூலமாக ஒரு பொருள் உடலை விட்டு வெளியேறி விட்டால், அந்தப் பொருள் உடலின் உள்ளே இல்லை அல்லது குறைந்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *