ஆரோக்கியம்

உணவு முறைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள்

உணவு முறைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள். பிறந்த நாள் முதலாக பசி என்ற உணர்வு உண்டான போதிலும், பிறந்த நாள் முதலாக பல்வேறு வகையான உணவு வகைகளை உட்கொண்டு வந்த போதிலும், எதனால் பசி உண்டாகிறது? எதற்காக நாம் உணவை உட்கொள்கிறோம்? உணவுக்கும் உடலுக்கும் என்ன தொடர்பு? என்பதையெல்லாம் பெரும்பாலான மக்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

பசி உண்டானால் உணவை உட்கொள்ள வேண்டும் என்ற பழக்கம் மாறி, கால ஓட்டத்தில் காலை 8 மணியானால் காலை உணவை உட்கொள்ள வேண்டும். மதியம் 1 மணியானால் மதிய உணவை உட்கொள்ள வேண்டும், இரவு 9 மணிக்கு இரவு உணவை உட்கொள்ள வேண்டும் என்று பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டோம். பசி உண்டாகிறதோ இல்லையோ, கடிகார நேரத்தைப் பார்த்து உணவை உட்கொள்ளத் தொடங்கியதன் விளைவு, நாம் உட்கொள்ளும் உணவு நம்மை உட்கொள்ளத் தொடங்கிவிட்டது.

உணவு வகைகள் மற்றும் உணவை உட்கொள்ளும் முறைகளில் நம்மிடையே உலாவும் சில தவறான நம்பிக்கைகளையும், அவற்றுக்கான சரியான விளக்கத்தையும் பார்ப்போம்.

தவறான நம்பிக்கை:
குறித்த நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும், இல்லையென்றால் ஆரோக்கியம் கெட்டுவிடும்.

சரியான வழிமுறை:
பசித்தால் மட்டும், பசியின் அளவுக்கு உணவை உட்கொள்ள வேண்டும் பசியில்லாமல் உணவை உட்கொண்டால் ஆரோக்கியம் கெட்டுவிடும்.

தவறான நம்பிக்கை:
நேரம் தவறிச் சாப்பிட்டால் உடல் உபாதைகள் உண்டாகும்.

சரியான வழிமுறை:
பசியில்லாமல் உணவை உட்கொண்டால், உடலில் தொந்தரவுகள் உண்டாகும்.

தவறான நம்பிக்கை:
சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளாமல் இருப்பதால் தான் வயிற்றில் புண்கள் உண்டாகின்றன.

சரியான வழிமுறை:
பசியில்லாமல் உணவை உட்கொள்வதால் தான், அந்த உணவுகள் ஜீரணமாகாமல் அழுகி வயிற்றில் புண்களை உண்டாக்குகின்றன.

தவறான நம்பிக்கை:
நல்ல சத்தான உணவுகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

சரியான வழிமுறை:
உடலால் எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். உணவுகள் முறையாக ஜீரணமானால் உடலுக்கு எந்த சத்து தேவையோ அதை உடலே உற்பத்தி செய்துகொள்ளும்.

தவறான நம்பிக்கை:
எவ்வளவு அதிகமாக உணவை உட்கொள்கிறோமோ, உடல் அவ்வளவு பலமாக இருக்கும்.

சரியான வழிமுறை:
பசி உண்டானால் மட்டும், எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவுகளை உட்கொண்டால் உடல் பலமாக இருக்கும்.

தவறான நம்பிக்கை:
இரவில் கட்டாயமாக சாப்பிட வேண்டும்.

சரியான வழிமுறை:
இரவில் பசியிருந்தால் மட்டும் எளிமையான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

தவறான நம்பிக்கை:
இரவில் உணவை உட்கொள்ளாமல் படுத்தால் யானை பலம் குறையும்.

சரியான வழிமுறை:
இரவில் உணவை உட்கொள்ளாமல் படுத்தால் உடல் உபாதைகள் விரைவாக குணமாகும்.

தவறான நம்பிக்கை:
நோயுள்ளவர்கள் இரவில் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

சரியான வழிமுறை:
நோயுள்ளவர்கள் இரவில் கண்டிப்பாக வெறும் வயிற்றில் உறங்கச் செல்ல வேண்டும். அப்போதுதான் நோய்கள் விரைவாக குணமாகும்.

தவறான நம்பிக்கை:
நோயாளிகள் பலவீனமாக இருப்பதால் அதிகம் சாப்பிட வேண்டும். காலி வயிற்றோடு இருக்கக் கூடாது.

சரியான வழிமுறை:
நோயாளிகள் பலவீனமாக இருப்பதால் அதிகம் சாப்பிடக் கூடாது, உடலால் உணவை ஜீரணிக்க முடியாது.

தவறான நம்பிக்கை:
நோயாளிகளுக்கு உடல் பலவீனமாக இருப்பதால் கஞ்சி உணவையும், பிசைந்த உணவையும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உடல் பலமாக இருக்கும்.

சரியான வழிமுறை:
நோயாளிகளுக்கு உடல் பலவீனமாக இருப்பதால் பழங்களையும் சமைக்காத உணவுகளையும் மட்டுமே கொடுக்க வேண்டும். அப்போதுதான் உடலால் எளிதாக அவற்றை ஜீரணிக்க முடியும்.

தவறான நம்பிக்கை:
பழங்களில் அதிகம் இனிப்பு இருப்பதால் பழங்களை உட்கொண்டால் நோயாளிகளின் உடலில் சர்க்கரை அதிகரிக்கும்.

சரியான வழிமுறை:
பழங்களில் உடலுக்குத் தேவையான நல்ல சர்க்கரை அதிகமாக இருப்பதால், அவை நோய்கள் விரைவாக குணமாக உதவும்.

தவறான நம்பிக்கை:
ஒவ்வொரு வேளை உணவை உட்கொண்டதும் ஒரு பழம் சாப்பிட்டால் நல்லது.

சரியான வழிமுறை:
பழங்களில் மட்டுமே மனித உடலுக்குத் தேவையான அனைத்து வகையான சத்துக்களும் உள்ளன. அதனால் எவ்வளவு பழம் உட்கொள்கிறோமோ அவ்வளவு நல்லது.

தவறான நம்பிக்கை:
நோயாளிகள் சில பழங்களைச் சாப்பிடக் கூடாது.

சரியான வழிமுறை:
பழங்களில் மட்டுமே மனித உடலுக்குத் தேவையான அனைத்து வகையான சத்துக்களும் இருக்கின்றன. அதனால் நோயாளிகள் அதிகமான பழங்களை உட்கொண்டால் தான் நோய்கள் விரைவாகக் குணமாகும். நோயாளிகள் எந்த பழத்தையும் ஒதுக்கத் தேவையில்லை.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X