உணவு முறைக்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்புகள் உள்ளனவா?
நிச்சயமாக உணவு முறைக்கும் ஆன்மீகத்திற்கும் நெருக்கமான தொடர்புகள் உள்ளன. ஆன்மீகத்தின் முதன்மை நோக்கமே மனதை கட்டுப்படுத்துவது தான். உணவு முறைகள் தவறாக இருக்கும் வேளைகளில் உட்கொள்ளும் உணவுகள் மனதைப் பாதிக்கின்றன.
தியானங்களும், ஆன்மீக பயிற்சிகள் செய்வது மனதைக் கட்டுப்படுத்துவதற்காக தான். ஒரு பக்கம் நம் பயிற்சியின் மூலம் மனதைக் கட்டுப்படுத்த முயலும் வேளைகளில், அடுத்த நிலையில் நாம் உண்ணும் உணவுகள் மனதை சீரழிக்கக் கூடும். அதனால் ஆன்மீகவாதிகளுக்கு உணவு ஒழுக்கம் மிகவும் முக்கியமானது.
நாம் எவற்றை உட்கொள்கிறோம் என்பதே நாம் என்னவாக மாறுகிறோம் என்பதை முடிவு செய்கின்றன.