உணவில் கலக்கப்படும் இரசாயனங்கள். கட்டுரையை வாசிப்பதற்கு முன்பாக சற்று சிந்தனை செய்யுங்கள். இன்றைய உலகில் இரசாயனங்களும், உயிர்க் கொல்லிகளும் கலக்கப்படாத உணவுகள் என்று ஏதாவது மிச்சம் இருக்கிறதா? சிந்தித்து விட்டு தொடர்ந்து வாசியுங்கள்.
நாம் அருந்தும் நீரில் இருந்து, காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள், மீன் வகைகள், அரிசி, பருப்பு, தானியங்கள், மசாலா பொருட்கள், சமையல் பொருட்கள், எண்ணெய்கள், என அனைத்திலும் கலப்படம், இரசாயன கலவைகள். இனி எவற்றை உட்கொள்வீர்கள்?
குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலில் இருந்து, முதியவர்களுக்குக் கொடுக்கப்படும் சத்து மாவுகள் வரையில் அனைத்திலும் கலப்படம், இரசாயனம், இனி எவற்றைக் கொடுப்பீர்கள்?
உங்கள் உணவை நீங்களே பயிர் செய்தால் ஒழிய கலப்படத்தையும் இரசாயனங்களையும் தவிர்க்க முடியாது. இன்னும் ஒரு முக்கியமான விசயம், பயிர் செய்தது நீங்கலாக இருந்தாலும், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் தெளிக்காவிட்டாலும், நீங்கள் விதைத்த தாவரத்தின் விதைகளை உருவாக்கியது யார் என்று பார்க்க வேண்டும். விதைகள் மரபணு மாற்றப்பட்டவையாக இருக்கலாம்.
ஒவ்வொரு தனிநபர் உடலின் தன்மைக்கு ஏற்ப எளிதில் ஜீரணமாகக் கூடிய அனைத்து உணவுகளும் நல்ல உணவுகள், அவற்றை தாராளமாக உட்கொள்ளலாம். அதனால் அச்சத்தை விடுங்கள் ஆசைப்பட்டதை சாப்பிடுங்கள் ஆனால் பசியோடும் அளவோடும்.
Leave feedback about this