ஆரோக்கியம்

உணவே மருந்து, மருந்தே உணவு

person eating food

உணவே மருந்து, மருந்தே உணவு. மனிதனின் பசியை போக்குவது உணவு, அவனது நோய்களைக் குணப்படுத்துவது மருந்து. இவை இரண்டும் வெவ்வேறு தன்மைகளையும் நோக்கங்களையும் கொண்டவை அவ்வாறு இருக்கையில் எதனால் “உணவே மருந்து, மருந்தே உணவு” என்ற பழமொழி உருவானது?

உடலுக்கு ஒத்துக் கொள்ளக்கூடிய எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவை உட்கொள்ளும் போது அந்த உணவை உடல் எளிதில் ஜீரணம் செய்துவிடுகிறது. அந்த ஜீரணத்திலிருந்து உடலின் இயக்கத்திற்கும் நோயைக் குணப்படுத்தும் வேலைக்கும் தேவையான சத்துக்களை உடல் பெற்றுக்கொள்கிறது. அந்த ஜீரணத்தில் இருந்து அதிகமான சத்துக்கள் உற்பத்தியாவதால் உடலின் இயக்கம் பாதிக்கப்படாமல் நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது.

உணவைக் குறைவாக உட்கொள்வதும், எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு வகைகளை உட்கொள்வதும், உடலுக்குத் தேவையான உணவை உட்கொள்வதும், நோய் குணமாக முக்கிய தேவை என்பதால் உணவே மருந்து என்ற பதம் பேச்சு வழக்கில் உருவாகியிருக்கும்.

அளவோடு இருக்கும் போது உணவு நோய்களைக் குணப்படுத்துகிறது, உடலின் தேவையைவிட அதிகமாக உட்கொள்ளப்படும் உணவு நோய் உற்பத்தியாகக் காரணமாகிறது.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field