நோய்கள்

உடலின் இயக்கமும் நோய்களால் உண்டாகும் மரணமும்

doctor holding red stethoscope body

மனித உடலின் இயக்கமும் நோய்களால் உண்டாகும் மரணமும். மனித உடலில் இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதும், புதிய செல்கள் உற்பத்தி ஆவதும் அன்றாட வேலையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உடலின் ஒவ்வொரு பகுதியின் செல்களும் மறு சீரமைக்கப்படுகின்றன. அதிகபட்சம் 6 மாதங்களில் முழு உடலும் மாற்றம் அடைகிறது. அதாவது 6 மாதங்களுக்கு ஒரு முறை மனித உடலின் பெரும்பாலான பகுதிகள் புதுப்பித்துக் கொள்கின்றன.

இந்த இயக்கத்தின் அடிப்படையில் பார்த்தால், ஒரு மனிதனுக்கு எவ்வளவு கொடுமையான, ஆபத்தான நோய் இருந்தாலும் அது 6 மாதங்களில் குணமாகத் தொடங்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் நோய் குணமாகத் தொடங்கவில்லை என்றால், அந்த நோயைக் குணமாகவிடாமல் அந்த நோயாளி ஏதோ தவறு செய்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

அவரின் நோய் குணமாகாமல் இருப்பதற்கு அவர் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளே கூட காரணமாக இருக்கலாம். இல்லாத நோய்க்கு வைத்தியம் பார்க்கும் போதும், தவறான மருந்து மாத்திரைகள் உட்கொள்ளும் போதும், இரசாயனங்களைப் பயன்படுத்தும் போதும் நோய் குறையாமல் பெருகக் கூடும். சிலருக்கு மரணம் கூட சம்பவிக்கலாம்.

நோய்களுக்கும் மரணத்துக்கும் என்ன தொடர்பு?

நோய்வாய்ப்பட்டவர்கள் மரணிப்பார்களா? என்றால்… மனித உடலின் பாதிப்புகளால் உண்டாகும் நோய்களைக் குணப்படுத்த முயற்சி செய்யலாம், அவற்றைக் குணப்படுத்த வாய்ப்புகள் உள்ளன ஆனால் மரணம் நடப்பதற்காக உண்டாகும் நோய்களைக் குணப்படுத்த முடியாது. மனித உடலில் நோய்கள் உண்டாகக் காரணம் என்ன வென்று ஏற்கனவே பல கட்டுரைகள் எழுதியுள்ளேன் அவற்றை வாசித்துப் புரிந்துகொள்ளுங்கள்.

நோய் கண்டவர்களில் சிலர் மரணித்து விடுகிறார்கள். உண்மையைச் சொல்வதானால் அவர்களின் மரணத்திற்கும் அவர்களின் நோய்க்கும் எந்த தொடர்பும் இருக்காது. நோய்வாய்ப்பட்டவர்கள் மரணிக்கவில்லை, மாறாக மரணத்தின் தருவாயில் அவர்களுக்கு நோய் கண்டது. புரிகிறதா? நோய்கள் உண்டானால் மரணம் நிகழும் என்பது சுத்தப் பொய். ஆனால் மரணம் நிகழ வேண்டிய நேரம் வந்துவிட்டால், அந்த மரணத்தை நிகழ்த்துவதற்காக சிலருக்கு நோய் உண்டாகலாம். உண்மையான நோய் வேறு, மரணம் வேறு.

அதனால் நோய்களைக் கண்டோ, மரணத்தைக் எண்ணியோ அச்சம் கொள்ளாதீர்கள். சரியான வாழ்க்கை முறைக்கு மாறி நோய்க்கு ஏற்ற சரியான மருத்துவத்தைப் பின்பற்றினால் எல்லா நோயும் நிச்சயமாகக் குணமாகும், ஆரோக்கியம் திரும்பும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X