உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவை உட்கொள்ளும் போது முதலில் அந்த உணவின் மீது வெறுப்பு உணர்வு அல்லது குமட்டல் உண்டாகும். உட்கொண்ட உணவின் வாடை அதிக நேரம் வாயில் வீசிக் கொண்டிருக்கும், சிறுநீரில் ஒத்துக்கொள்ளாத உணவின் வாடை இருக்கும்.
உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவை உட்கொண்ட பிறகு வயிறு உப்புசமோ, வாந்தியோ, அசதியோ, சோர்வோ, மலச்சிக்கலோ, உண்டாகும்.