மனித உடலுக்கு எல்லாம் தெரியும், யாரும் எதையும் கற்றுக் கொடுக்க வேண்டிய தேவையில்லை. உடலின் இயக்கத்திலும் பராமரிப்பிலும் மனிதர்கள் இடையூறு செய்யாமல் இருந்தாலே, அனைத்தையும் உடல் சுயமாக செய்துக் கொள்ளும்.
1. பிறந்த குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும், வளர்க்க வேண்டும்?
2. குழந்தைக்கு சரியான பருவத்தில் ஒவ்வொரு உறுப்பையும் எவ்வாறு வளர்க்க வேண்டும், இயக்க வேண்டும்?
3. உண்ணும் உணவை எவ்வாறு இரத்தமாக மாற்ற வேண்டும்? இரத்தத்தில் எவ்வளவு சத்துப் பொருட்களை கலக்க வேண்டும்?
4. ஒரு மனிதனின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்க வேண்டும்? அந்த இரத்தம் எந்த தன்மையில் இருக்க வேண்டும்?
5. இதயம் எவ்வாறு துடிக்க வேண்டும்? எவ்வாறு இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்த வேண்டும்?
6. உடலின் உள் உறுப்புகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும்? அவற்றை எவ்வாறு இயக்க வேண்டும்? தூய்மைப்படுத்த வேண்டும்?
7. இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை எவ்வாறு சிறுநீரகம் சுத்திகரிக்க வேண்டும்?
8. சுத்திகரித்த கழிவுகளை எவ்வாறு உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும்?
9. கழிவுகள் உடலிலிருந்து வெளியேறும் வரையில், கழிவுகளால் உடலுக்கு எந்த பாதிப்பும் உருவாக்காமல் எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?
என்பன போன்ற அனைத்து விஷயங்களும் உடலுக்கு தெரியும். நான் குறிப்பிட்டது ஓரிரு விஷயங்களை தான் மேலும் பல நூறு விஷயங்கள் உடலுக்குள் தினமும் நடந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் பிறந்த நாள் முதல் இன்று வரையில் அனைத்து இயக்கங்களும் செயல்களும் சரியாக சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.
மனிதர்கள் புரிந்து கொண்டதை தாண்டியும் உடல் மிகவும் புத்திக் கூர்மையும் இயக்க சக்தியும் கொண்டது. அதனால், உடலுக்கு யாரும் எதுவும் செய்யவும், கற்றுக் கொடுக்கவும் தேவையில்லை. உடலின் இயக்கத்தில் இடையூறு செய்யாமல் இருந்தாலே அனைத்து நோய்களும் தொந்தரவுகளும் தானாக குணமாகும். வாழ்வின் கடைசி நாள் வரையில் சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் உடல் இயங்கும்.