மருத்துவம்

உடலின் தொந்தரவுகளுக்கு என்ன தீர்வு?

உடலின் தொந்தரவுகளுக்கு என்ன தீர்வு? நான் கூறவில்லை, திருவள்ளுவ பெருந்தகை மிக அழகாக அன்றே கூறிச் சென்றார்.

“நோய்நாடி நோய்முதல் நாடி, அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”

பொருள்:
ஒருவர் உடலில் உள்ள நோயைக் குணப்படுத்த வேண்டுமானால். அது என்ன நோய் என்பதை அறிந்து. அந்த நோய் உடலில் எங்கு எப்படி உருவானது என்பதை ஆராய்ந்து. அந்த நோயைக் குணப்படுத்தக் கூடிய மருத்துவத்தை அறிந்து. அந்த மருத்துவத்தைப் பிழையில்லாமல் முறையாகச் செய்ய வேண்டும்.

இது திருவள்ளுவர் அருளிய நோய் தீர்க்கும் முறை. ஆனால் இன்றைய மருத்துவ உலகில் நடப்பதென்ன?

  • நோய் தெரியாது
  • நோய் உண்டான உறுப்பு தெரியாது
  • அதன் மூலக் காரணம் தெரியாது
  • அதைத் தீர்க்கும் வழிமுறையும் தெரியாது

ஆனால் நோய்க்கான மருந்துகள் மட்டும் தெரியும். அந்த மருந்துகளில் இருந்து பல பக்க விளைவுகள் உருவாகும் என்பதும் தெரியும், ஆனாலும் பரிந்துரைப்போம். ஆங்கில மருத்துவம் மட்டுமல்ல, பல பாரம்பரிய வைத்திய முறைகளும் இன்று சீர்கெட்டுக் கிடக்கின்றன. நாம் தான் சூதானமாக நடந்து கொள்ள வேண்டும்.

எது நோய்?

நமது அன்றாட அலுவல்களைச் செய்யவிடாமல் உடலையோ மனதையோ முடக்கிப்போடும் அனைத்தையும் நோய் என்று கூறுகிறோம்.

நோய்கள் எவ்வாறு உருவாகின்றன?

நம் உடலின் செயல்திறன் முழுமையாக இல்லாத போதும், கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் உடலின் உள்ளேயே தேங்கும் போதும், கழிவு தேங்கும் உறுப்பில் நோய்கள் உற்பத்தி ஆகிறது.

எது உண்மையான மருத்துவம்?

உடலின் செயல்திறனை அதிகரிப்பதும், உடலில் தேங்கிய கழிவுகளை முழுமையாக வெளியேற்றுவதும், இனிமேல் புதிய கழிவுகள் தேங்காமல் தடுப்பதும், மட்டுமே உண்மையான மருத்துவமாகும்.

இந்த வழிமுறையில் மருத்துவம் செய்யும்; அதாவது நாடிப் பார்த்து, நோயறிந்து, நோயின் காரணம் அறிந்து, உடலின் சக்தி நிலையை அதிகரித்து, தேங்கிய கழிவுகளை வெளியேற்றக் கூடிய மருத்துவத்தை மட்டுமே நாடுங்கள். இதுவே உங்களுக்குச் சிறப்பானதாகும். இது மட்டுமே நோய்களில் இருந்தும். உடல் உபாதைகளில் இருந்தும் உங்களுக்கு நிரந்தர தீர்வை தரும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X