உடலின் மொழிகள் என்பவை, தாகம், பசி, காய்ச்சல், வலிகள், அரிப்பு, கூச்சம், போன்றவை. இவை, உடல் மனிதனுடன் உரையாடும் வழிமுறைகள். உடல் தனக்குத் தேவைகள் உருவாகும் போதும், தொந்தரவுகள் உருவாகும் போதும் அவற்றை உணர்த்த சில அறிகுறிகளை மனிதர்களுக்குக் காட்டும். சிலர் அந்த அறிகுறிகளை புரிந்துகொள்ளாமல் அவற்றை நோய்கள் என்று நம்புவதனால், சிறு அறிகுறிகள் கூட நோய்களாக மாறுகின்றன.