உடல் உறுப்புகளின் ஆசை. கண்களுக்கு விருப்பமான காட்சிகளைக் காண வேண்டும், ரசிக்க வேண்டும் என்று ஆசை. காதுகளுக்கு விருப்பமான ஓசையை ஒலியைக் கேட்க வேண்டும் என்று ஆசை. மூக்குக்கு விருப்பமான வாசனைகளை நுகர வேண்டும் என்று ஆசை. நாவுக்கு விருப்பமான சுவைகளைச் சுவைத்துப் பார்க்க வேண்டும் என்று ஆசை. தோலுக்கு விருப்பமான சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை. பஞ்சேந்திரியங்களின் அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பது மனதின் ஆசை.
அத்தனை உடல் உறுப்புகளின் ஆசையையும் பூர்த்தி செய்து வைப்பதற்காக மனிதர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். மனிதர்களின் ஆசை எந்தக் காலத்திலும் தீராதது குறையாதது. உடல் உறுப்புகள் மற்றும் மனதின் தன்மைகளைப் புரிந்து கொண்டு அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டுமே ஒழிய உடலின் ஆசைகளை நிறைவேற்றுவதன் மூலமாக அவற்றைத் திருப்தி செய்ய எவராலும் முடியாது. ஒன்று முடிந்தால் ஒன்று தோன்றிக்கொண்டே இருக்கும்.
Leave feedback about this