உடல் பலவீனமாக இருப்பவர்களுக்கு உட்கொள்ளும் உணவு எளிதில் ஜீரணமாகாது, அதனால் உணவை உட்கொண்டவுடன் அசதியும் சோர்வும் உண்டாகும். தூங்கி எழுந்தால் தான் அவர்களின் உடலால் மீண்டும் செயல்பட முடியும்.
அவர்களின் உடல் விரைவில் சோர்வடையும், சோம்பலும், எரிச்சலும், அடிக்கடி அசதியும் உண்டாகும். அஜீரணம், மலச்சிக்கல் உண்டாகும், அடிக்கடி தலைவலி உண்டாகும்.
இவை அனைத்தும் உடலின் பலவீனத்தைக் குறிக்கும் அறிகுறிகள். இவற்றை அலட்சியப் படுத்தும் போது நோய்கள் உண்டாகும்.