ஆண்கள்

உடல் உறுப்புகளின் பலகீனத்தால் உண்டாகும் ஆண்மைக் கோளாறு

உடல் உறுப்புகளின் பலகீனத்தால் உண்டாகும் ஆண்மைக் கோளாறு. உடலின் உள் உறுப்புகளில் ஏதாவது பலவீனம் அல்லது நோய் உருவாகும் போது அந்த பலவீனத்தை சரி செய்ய உடலின் பெரும்பாலான சக்திகள் செலவழிக்கப்படுகின்றன.

இது போன்ற நேரங்களில் இயல்பாகவே ஆண்களுக்கு உடலுறவில் நாட்டம் இருக்காது. உடலின் அறிவை பொறுத்தவரையில் உடலுறவு என்பது மூன்றாம் பட்ச தேவைதான். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் மற்றும் ஆரோக்கியமாக இருக்கும் வரையில் மட்டுமே உடலுறவில் நாட்டம் உண்டாகும்.

ஆண்மை குறைபாடுகள் ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. இதைக் குணப்படுத்த எந்த வகையான மருந்து மாத்திரைகளும் தேவையில்லை. உடல் மற்றும் மனதின் நோய்களையும் பலம் இழந்த உறுப்புகளையும் சரிசெய்த பின்னர், ஆண்மையும் உடலுறவில் நாட்டமும் சுயமாகத் திரும்பிவிடும்.