மனிதர்களின் துன்பங்களும் அவற்றுக்கான தீர்வுகளும்
இந்தப் பூமியில் துன்பங்களை அனுபவம் செய்யாத மனிதர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இந்த உலகம் மனிதர்களுக்கு சோதனை மற்றும் பயிற்சிக் களமாக இருப்பதனால்; பெயர், புகழ், மற்றும் செல்வத்தை, நிறைவாகப் பெற்றவர்கள் முதல் அடுத்த வேளை உணவுக்கும் வழி இல்லாதவர்கள் வரையில், அனைவருக்கும் ஏதாவது ஒரு அளவில் துன்பம் இருக்கும்.
பிறந்து வளர்ந்த சூழ்நிலையும், வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்களும், அனுபவங்களும், ஒரு மனிதன் தன் வாழ்க்கையை என்னவாக பார்க்கிறான் என்பதைத் தீர்மானிக்கின்றன. ஒரு மனிதன் பெரும் துயரம் என்று எண்ணி வேதனைப் படும் ஒரு விசயம் இன்னொரு மனிதனுக்கு சாதாரண விசயமாக இருக்கலாம். இன்னொரு மனிதனுக்கு அது அன்றாட வாழ்க்கையாக இருக்கலாம்.
ஒரு மனிதனின் தினசரி வாழ்க்கை, இன்னொரு மனிதனுக்கு பெரும் துன்பமாகவோ, பெரும் இன்பமாகவோ அல்லது கனவு வாழ்க்கையாகக் கூட இருக்கலாம். இவற்றுக்குக் காரணம் மனப் பதிவுகள் மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகள். மனிதர்களின் அனைத்து துன்பத் துயரங்களுக்கும் தீர்வு வாழ்க்கையைப் புரிந்து கொள்வது மட்டும் தான்.
மனித வாழ்க்கை என்பது உண்மையில் ஒருவரது அனுபவத்தில் இல்லை மாறாக மனிதனின் புரிதலில் உள்ளது. ஒவ்வொரு நிகழ்வையும், சம்பவத்தையும், பார்க்கும் கோணமும், புரிதலும் மாறும் போது வாழ்க்கையின் புரிதலும், அனுபவமும், சூழ்நிலையும் மாறும். மனதில் அமைதி உண்டாகும்.
1 Comment