மனித வாழ்க்கை
ஒரு விசித்திரப் பயணம்
அதைக் கடப்பது சுலபம்
நிமிர்ந்து நடப்பது கடினம்
கடக்க வேண்டிய பாதை
கண்முன்னே கிடக்கிறது
நடக்கத் துணையில்லை
எனக்கும் துணிவில்லை
பயணத்தைத் தொடங்கவில்லை
என்னருகில் நீ இல்லாததால்
துணையாக வருவாயா? நீ
என் கல்லறை வரையில்
கைகோர்த்துக் கொண்டு