தொலைதூர சிகிச்சை. இந்த உலகில், காற்று, ஆற்றல், அதிர்வு, மற்றும் அலைகளின் மூலமாக உலகமும், அதன் இயற்கையும், இயற்கையின் படைப்புகளும், அவற்றில் வாழும் அனைத்து உயிரினங்களும் பிணைக்கப் பட்டிருக்கின்றன. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள், பூச்சிகள், தாவரங்கள் என எல்லா உயிரினங்களும், ஒன்றுடன் ஒன்று சார்ந்தும் இணைந்தும் இயங்குகின்றன, வாழ்கின்றன.
காற்று, ஆற்றல், அதிர்வு, மற்றும் அலைகளைப் புரிந்துகொண்டு, அவற்றை முறையாக பயன்படுத்தும் போது உலகின் ஒரு மூலையில் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் ஒரு மனிதருக்கு, உலகின் இன்னொரு மூலையில் இருக்கும் மனிதர் ஆற்றலைப் பகிர்ந்துகொள்ள முடியும், அவருக்கு ஹீலிங் மற்றும் கிளின்சிங் செய்யவும் முடியும்.
இந்த உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அந்த மனிதர் மற்ற மனிதர்களுடன் இயற்கையின் இணைப்பில் இருப்பதனால், அவற்றைப் பயன்படுத்தி யாரும் யாருக்கு ஹீலிங் செய்ய முடியும். தோலைத் தூரத்தில் வாழும் மனிதர்களுக்கு ஹீலிங் மற்றும் கிளின்சிங் செய்வதற்கு கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
1. முதலில் ஹீலிங் பெறுபவரின் தொந்தரவுகளை அறிந்துகொள்ள வேண்டும். எதற்காக ஹீலிங் செய்கிறோம் என்ற தெளிவு இருக்க வேண்டும்.
2. ஹீலிங் பெறுபவரின் பெயரையும் அவரின் தாயின் பெயரையும் அறிந்துகொள்ள வேண்டும்.
3. ஹீலிங் பெறுபவரின் முழு உருவத்தைக் காட்டும் புகைப்படத்தைப் பயன்படுத்தலாம். புதிதாக எடுத்த புகைப்படம் அல்லது தொந்தரவு உண்டான பிறகு எடுத்த புகைப்படத்தைப் பயன்படுத்துவது இன்னும் சிறப்பான பயனைத் தரும்.
4. ஹீலிங் பெறுபவர் பயன்படுத்திய ஆடை, ஆபரணங்கள் போன்ற பொருட்களையும் பயன்படுத்தலாம்.
5. தொலைப்பேசி அழைப்பின் மூலமாகவும், வீடியோ கால் மூலமாகவும் தொலைதூரச் சிகிச்சை அளிக்கலாம்.
6. ஹீலிங் பெறுபவர் நம் முன்னர் அமர்ந்திருப்பதைப் போன்று கற்பனை செய்து கொண்டும் சிகிச்சை அளிக்க வேண்டும்.