தொலைதூர சிகிச்சை அளிக்கும் வழிமுறைகள்
1. ரெய்கி சிகிச்சையை (ஹீலிங்) தொடங்குவதற்கு முன்பாக மாஸ்டர் 20 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.
2. சிகிச்சையை (ஹீலிங்) தொடங்குவதற்கு முன்பாக, இறைவன், இயற்கை மற்றும் பிரபஞ்ச ஆற்றலின், அனுமதியை மற்றும் உதவியைக் கோர வேண்டும்.
3. சிகிச்சை பெறுபவரை சாயாமல் நாற்காலியில் அமர்ந்துகொள்ளச் சொல்ல வேண்டும், நாற்காலியில் அமர முடியாதவராக இருந்தால் கட்டிலில் படுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்.
4. சுருக்கமாக தொலைதூர ரெய்கி சிகிச்சை எவ்வாறு நடைபெறுகிறது என்பதை, சிகிச்சை பெறுபவருக்கு விவரிக்க வேண்டும்.
5. சிகிச்சையைத் தொடங்கும் முன்னர் சிகிச்சை பெறுபவரை 5 நிமிடங்கள் அமைதியாக இருக்க பணிக்க வேண்டும்.
6. சிகிச்சை பெறுபவர் பூரணமாக குணமாக வேண்டும் என்ற நோக்கத்துடன் சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
7. சிகிச்சை அளிப்பவர், மனதளவில் தன்னை பாதுகாக்கும் கவசம் செய்துகொள்ள வேண்டும்.
8. சிகிச்சை பெறுபவர் நம் முன்னர் இருப்பதாக மனதளவில் கற்பனை செய்துகொண்டு, அவருக்குத் தலையில் தொடங்கி கால்கள் வரையில் ஆற்றலையும், ஆராவையும் மூன்று முறைகள் சுத்தம் செய்ய வேண்டும் (cleansing).
9. சிகிச்சை பெறுபவரின் உருவத்தைக் கற்பனை செய்துகொண்டு அல்லது அவரது புகைப்படத்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.
10. சிகிச்சை பெறுபவரின் பெயரையும் அவரது தாயின் பெயரையும் கூறி ஆற்றலை அனுப்ப வேண்டும். உதாரணத்துக்கு “இன்னாரின் மகனான இன்னாருக்கு இன்ன உபாதைகளில் இருந்து விடுபட ரெய்கி சிகிச்சை அளிக்கிறேன்.”
11. இந்த தொலைதூர சிகிச்சையை பொறுமையாக நிதானமாக, 15 முதல் 40 நிமிடங்கள் வரையில் செய்ய வேண்டும்.
12. ரெய்கி ஆற்றல், சிகிச்சை வழங்குபவரின் உடலில் நுழைவதையும், அவரின் உடலிலிருந்து கரங்களின் மூலமாக சிகிச்சை பெறுபவரின் உடலில் புகுவதையும் கவனிக்க வேண்டும்.
13. சிகிச்சை வழங்குபவரின் உடலிலிருந்து சிகிச்சை பெறுபவரின் உடலுக்குள் செல்லும் ஆற்றல் தடைப்படும் போது அல்லது குறையும் போது, சிகிச்சை முடிந்துவிட்டது என்று பொருளாகும்.
14. தொந்தரவுகள் குணமாகும், தேவைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையை சிகிச்சை பெறுபவருக்கு ஏற்படுத்த வேண்டும்.
15. சிகிச்சைக்குப் பிறகு இறைவனுக்கும், இயற்கைக்கும், ரெய்கிக்கும், நன்றி கூற வேண்டும்.
Leave feedback about this