திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் எதற்காக? நம் பாரம்பரியத்தில் பெரும்பாலான பழக்கவழக்கங்களை மனதை மகிழ்ச்சி படுத்துவதற்காகவும் திருப்திப் படுத்துவதற்காகவும் கடைப்பிடித்து வருகிறோம். வணக்கம் கூறுவது, வாழ்த்துக்கள் கூறுவது, மரியாதைக் கொடுப்பது, போன்ற அங்கீகாரங்களும்; பிறந்தநாள் விழா, பாராட்டு விழா, புதுமனை புகுவிழா, திருமண நிகழ்வு, சீமந்தம், போன்ற நிகழ்வுகளும் கொண்டாட்டங்களும் நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களின் மன நிம்மதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவுமே செய்து வருகிறோம்.
மனதை முழுமையாக புரிந்துக்கொண்ட நம் முன்னோர்கள், மனதை எப்போதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், திருப்தியுடனும் வைத்திருக்க பல வழிமுறைகளைக் கையாண்டார்கள். யோகா, தியானம், வழிபாடுகள், திருவிழாக்கள், பெருநாட்கள், முதலானவற்றின் நோக்கம் ஒன்றுதான். மனதின் அமைதியும் மகிழ்ச்சியும். அந்த கொண்டாட்டத்துக்குரிய நபரையும், அவரைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவதே இவ்வாறான நிகழ்ச்சிகளின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.
Leave feedback about this